அதிமுகவுக்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு : பூரிப்பில் ஓபிஎஸ் – ஈபிஎஸ்

 

அதிமுகவுக்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு : பூரிப்பில் ஓபிஎஸ் – ஈபிஎஸ்

சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

அதிமுகவுக்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு : பூரிப்பில் ஓபிஎஸ் – ஈபிஎஸ்

தமிழக சட்டப்பேரவை தேர்தலின் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழகத்தில் 234 தொகுதிளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக – அதிமுக தலைமையில் கூட்டணி கட்சிகள் இடம்பெற்றுள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் , மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட், மனித நேய மக்கள் கட்சி, முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.அதிமுகவை பொறுத்தவரையில் பாஜக, பாமக, தமாகா, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.

அதிமுகவுக்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு : பூரிப்பில் ஓபிஎஸ் – ஈபிஎஸ்

இந்நிலையில் அதிமுக கட்சிக்கு இந்து மக்கள் கட்சி, புதிய நீதி கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதேபோல் நடிகர் கார்த்திக்கின் மனித உரிமை காக்கும் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளது. முன்னதாக கூட்டணி பேச்சுவார்த்தைக்கு காத்திருந்தும் அழைக்கவில்லை என கூறி சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியிலிருந்து வெளியேறியுள்ளது.