“உருமாறிய கொரோனா வைரஸ்” ரூ. 4 கோடியில் மரபணு பகுப்பாய்வுக் கூடம்!

 

“உருமாறிய கொரோனா வைரஸ்” ரூ. 4 கோடியில் மரபணு பகுப்பாய்வுக் கூடம்!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை ஆய்வகத்தில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள மரபணு பகுப்பாய்வு கூடத்தை திறந்து வைத்தார். சட்டமன்றப் பேரவையில் கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி நடைபெற்ற மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறைக்கான மானியக் கோரிக்கையின் போது மரபணு பகுப்பாய்வு கூடம் ரூபாய் 4 கோடி செலவில் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் நிறுவப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள பொது சுகாதார ஆய்வகத்தில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள மரபணு ஆய்வு கூடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

“உருமாறிய கொரோனா வைரஸ்” ரூ. 4 கோடியில் மரபணு பகுப்பாய்வுக் கூடம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைவதை கண்டறிய ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கர்நாடக மற்றும் தெலுங்கானாவில் இயங்கும். மரபணு ஆய்வகங்களில் மாதிரிகள் எடுக்கப்பட்டு பகுப்பாய்வு முடிவுகள் தாமதமாக பெறப்பட்டு வந்தது. தற்போது குறைகளை போக்கும் வகையில் பொது சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் மாநில பொது சுகாதார ஆய்வகத்தில் மரபணு பகுப்பாய்வு கூறும் நிறுவப்பட்டுள்ளது. இவ்வாறான வைரஸ்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதன் அடிப்படையில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு நோயின் தாக்கத்தை பெருமளவு தடுக்க இயலும்.

“உருமாறிய கொரோனா வைரஸ்” ரூ. 4 கோடியில் மரபணு பகுப்பாய்வுக் கூடம்!

மேலும் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் வாயிலாக திறன்மிகு உதவியாளர் நிலை 2 பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 9 நபர்களுக்கும் ,கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு 82 வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.