நாம் அனைவருமே வாழ தகுதியற்றவர்கள்…. புதுக்கோட்டை சிறுமி வன்கொடுமை குறித்து நடிகை வரலட்சுமி ஆவேசம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை காணவில்லை என பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் அந்த சிறுமியை தேடிய போலீசார், நேற்று அறந்தாங்கியில் இருக்கும் ஒரு வறண்ட குளத்தில் சடலமாக கண்டெடுத்தனர். அந்த சிறுமியின் உடலில் பலத்த காயங்கள் இருந்த நிலையில், அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரிய வந்தது. இவ்வாறு தமிழகத்தில் பல சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி கொலை செய்யப்படும் சம்பவம் தொடருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் நிலையில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சிறுமியின் உறவினர்கள் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது ட்விட்டரில், “ மீண்டும் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். நாம் எல்லோரும் கொரோனா வந்து சாவதில்லை தவறில்லை. கடவுளின் பார்வையில் நாம் அனைவருமே வாழத்தகுதியற்றவர்கள்” என பதிவிட்டுள்ளார்.

Most Popular

நெல்லையில் மேலும் 147 பேருக்கு கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 5,788 ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட5,609 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,63,222 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த...

புதிய கல்விக் கொள்கை: மாணவர்கள் நலன் சார்ந்த முடிவைத் தமிழக அரசு அறிவிக்கும்! – ஜி.கே.வாசன் நம்பிக்கை

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழக அரசு மாணவர்கள் வருங்கால நலன் சார்ந்த நிறைவான முடிவை அறிவிக்கும் என்று ஜி.கே.வாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கல்வியாளர்கள், மாநில...

ஊரடங்கு விதிமீறல் : ரூ.19.58 கோடி அபராதம் வசூல்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சமூக விலகல் மற்றும் மாஸ்க் அணிதல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கை மூலமாக தான் நம்மை காத்துக் கொள்ள முடியும் என்பதால், இந்த கொடிய வகை நோய்த்தொற்றில்...

`வீட்டில் புதையல் இருக்கு; நரபலி கொடுக்கணும்!’- சாமியாரின் ஆசைவார்த்தையை கேட்டு பேரனை நரபலி கொடுக்க முயன்ற பாட்டி, மகன்

வீட்டில் புதையல் இருப்பதாக கூறிய சாமியாரின் ஆசைவார்த்தையை கேட்டு பேரனை நரபலி கொடுக்க முயன்ற பாட்டியும், மகனும் கைது செய்யப்பட்டனர். இந்த அதிர்ச்சி சம்பவம் களக்காடு அருகே நடந்துள்ளது. நெல்லை மாவட்டம், களக்காடு அருகே...