வரன் தரும் சுமங்கலி பாக்கியம் தரும் வரலட்சுமி விரதம்… நோன்பிருக்கும் முறை!

ஆடியில் அடுத்தடுத்து வரும் விசேஷங்களில் வரலட்சுமி விரதம் அல்லது நோன்பு என அழைக்கப்படும் விரதம் மிக முக்கியமான ஒன்று. திருமணமான சுமங்கலி பெண்களுக்கு வரலட்சுமி விரதம் வரம் தரும் லட்சுமி விரதம் என்றால் கன்னிப் பெண்களும் இந்த விரதம் வரன் தரும் விரதமாகவே விளங்குகிறது.

தேவி மகாலட்சுமி அருள் வேண்டி பிரார்த்தித்து கொண்டாடப்படும் வரலட்சுமி நோன்பு பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து கடைபிடிக்கப்படும் ஒரு சிறப்பான விரதமாகும். ஆடி மாத பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. இவ்வாண்டு 31.7.20 – ல் வரலட்சுமி நோன்பு வருகிறது. மகாலட்சுமியே இந்த விரத்தின் மகிமையை விளக்கினாள் என்பது வரலாறு.

கணவனின் உடல்நலம், ஆரோக்கியம், செல்வச்செழிப்பு, தொழில், உத்யோகத்தில் முன்னேற்றம் ஆகிவற்றுடன் தனது தாலி பாக்கியம் நிலைக்கவும், வரலட்சமி நோன்பை சுமங்கலி பெண்கள் கடைபிடிக்கின்றனர். நல்ல மனதிற்கு இசைந்த கணவன் அமைய வேண்டும் என பிரார்த்தித்து கன்னிப் பெண்களும் வரலட்சுமி நேன்பு இருக்கின்றனர்.

உள்ளத் தூய்மையுடனும், உடல் தூய்மையுடனும் அஷ்ட இலக்குமியாக விளங்கும் அம்பிகையை வழிபட்டால் மகிழ்ச்சியான வாழ்க்கை அமைந்துவிடும். வரலட்சுமி விரதத்தை கடைப்பிடிப்பதால், இல்லத்தில் செல்வம் செழிக்கும். கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ்வதால் மனைவியர் தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியம் கிடைக்கப் பெறுவார்கள் பிள்ளைப் பேறு இல்லாதவர்கள் ‘பாக்கிய லட்சுமியின் அருளினால் மக்கள்பேறு பெறுவார்கள். ஜாதகத்தில் உள்ள சுக்கிர தோஷம், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் நீங்கும். கணவன் – மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். பிரிந்திருக்கும் தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். அதனால் இந்த விரதத்தை சுமங்கலி பெண்கள் எல்லோரும் விரும்பி கடைப்பிடிகின்றனர்.

வரலட்சுமி நோன்பு இருந்து எதை கேட்டாலும் அதனை லட்சுமிதேவி வழங்குவாள். மகட்பேறு, வீடு வாசல், நிலபுலன்கள், வியாபார அபிவிருத்தி, செல்வசெழிப்பு என அனைத்தையும் வாரி வழங்குவாள். அஷ்ட லட்சுமி அஷ்ட போக பாக்கியங்களைப் தருவாள். விரத தினத்தன்று லட்சுமி துதி, லட்சுமி வரலாறு போன்றவற்றை சொல்லி தங்களை முழுமையாக வழிபாட்டில் ஈடுபடுத்திக்கொண்டு லட்சுமிதேவியிடம் தேவைகளை முன்வைக்கவேண்டும்.

1. தனலட்சுமி, 2. தான்யலட்சுமி, 3. தைரியலட்சுமி, 4. ஜெயலட்சுமி, 5. வீரலட்சுமி, 6. சந்தானலட்சுமி, 7. கஜலட்சுமி, 8. வித்யாலட்சுமி என அஷ்ட லட்சுமிகளான அம்சமாக அஷ்ட ஐஸ்வரியங்களை அள்ளித்தருபவளாக அமைந்தவள் வரலட்சுமி. அவளையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகள் என்பதால், ஒன்பது நூல் இழைகளால் ஆன, ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்புக் கயிறை (சரடை) வரலட்சுமி நோன்பு பூஜையில் வைத்து வழிபடுவது வழக்கம்.

வரலட்சுமி விரதத்தின் மேன்மையைச் சொல்லும் கதைகளில் ஒன்று மகததேச ராணி சுசந்திரா, செல்வ வளத்தின் மமதையால் ஒருமுறை மகாலட்சுமியை அவமதித்தாள். கர்வம் கொண்டு லட்சுமியை அவமதித்ததால், அவள் செல்வம் அனைத்தையும் இழந்த வாடினாள். ராணி சுசந்திராவின் மகள் சாருமதி, அம்மாவை போல் இன்றி நற்குணங்கள் நிரம்பியவளாக திகழ்ந்தாள்.

எல்லோருரிடமும் அன்பும் கணவனையும் அவனது பெற்றோரையும் பேணி, மதித்து நடக்கும் பெண்ணாக இருந்த சாருமதி மீது கருணை கொண்ட மகாலட்சுமி, ஒருநாள் சாருமதியின் கனவில் தோன்றி வரலட்சுமி விரதம் பற்றியும் அதனை கடைப்படிக்கும் முறைகள் பற்றியும் அதன் பலாபலன்கள் பற்றியும் கூறி மறைந்தாள் .

அதன்படி வரலட்சுமி விரதத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்கினாள் அவள். சாருமதி நியமமாக மேற்கொண்ட விரதத்தால் மகிழ்ந்த மகாலட்சுமி, அவளுக்கு நலன்கள் அனைத்தும் அஷ்ட ஐஸ்வரியங்களை அருளினாள்.

தன் மகளின் நிலையைப் பார்த்து, விபரங்களை கேட்டறிந்து தன் கர்வத்தை விட்டு வரலட்சுமி விரதத்தை தானும் கடைப்பிடித்து, இழந்த செல்வத்தை மீண்டும் பெற்றாள் சுசந்திரா. அவள் வாழ்வும் மீண்டும் வளம் நிறைந்ததாக ஆனது என்கிறது வரலாறு .

வரலட்சுமி விரதம் மேற்கொள்வது எப்படி எனில் விரதத்திற்கு முந்தைய நாள் வியழனன்று வீட்டை சுத்தப்படுத்தி, பூஜைக்காண இடத்தை பசும் சாணமிட்டு மெழுகி, மாக்கோலமிட்டு வைப்பதுடன் விளக்கு முதலான பூஜா சாமன் கழுவி வைக்க வேண்டும் . வெள்ளிக்கிழமை காலை எழுந்து நீராடி மடி உடுத்தி பூஜை அறை அல்லது மாடத்தில் விளக்கேற்றி வைத்து விட்டு . பித்தளை சொம்பு அதாவது கலசம் எடுத்து அதில் மஞ்சள் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கலந்த நீரை ஊற்றி அதன் மேல் மாவிலை கொத்தை வைத்து அதன்நடுவே மஞ்சள் பூசிய தேங்காய் ஒன்றை வைத்து . அதனை லட்சுமி முகம் போல் அலங்கரித்து . அதில் லட்சுமி தேவி எழுந்தருளியதாக பாவித்து , உளத்தூய்மையுடன் பிரார்த்தித்து லட்சுமிதேவி அந்த கலசத்தில் ஆவகணம் செய்து . ஆடை, ஆபரணம் , மலர்களால் கலசத்தில் எழுந்தருளிய லட்சுமி அலங்கரித்து . ஒன்பது இழை ஒன்பது முடிச்சுகள் கொண்ட நோன்பு மஞ்சள் சரடையும் லட்சுமி மீது வைக்க வேண்டும் .

பின்னர் நைவேத்தியமாக தயாரித்து வைத்துள்ள சாதம், பொங்கல், வடை, பாயசத்துடன் தேன், பால், நெய் முதலானவற்றையும் படையலிட்டு தூபதீபங்கள் காட்டி மனமுருக லட்சுமி தேவியை வழிபட வேண்டும். அப்போது மனசீகமாகவோ வாய்விட்டோ லட்சுமி தேவியிடம் தங்கள் பிரார்த்தனைகளை முன் வைக்கலாம்.

 

மேலும் லட்சுமி அஷ்டோத்திரம், லட்சுமி சகஸ்ரநாமம், கனகதாரா ஸ்தோத்திரம் போன்ற லட்சுமி ஸ்தோத்திரங்களை பாடி வழிபட கைமேல் பலன் கிடைக்கும். அக்கம் பக்கத்து பெண்களை அழைத்த வசதி வாய்ப்பு ஏற்ப வெற்றிலை பாக்கு மஞ்சள் குங்கும் பழங்கள் வழங்கி அவர்களின் வாழ்த்துக்களையும் பெறலாம் . பின் நோன்பு சரடை சுமங்கலிகள் கணவன் மூலம் கழுத்தில் அணிவர்கள். கன்னிப் பெண்கள் கைகளில் கட்டிக்கொள்வார்கள். விரதத்தால் மகிழும் மகாலட்சுமி சகல சௌபாக்கியங்களும் தருவாள்.
வரலட்சுமி நோன்பு நாளில் அம்மன், கோவில்களுக்கு சென்று நெய்தீபம் ஏற்றி வணங்கி, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கி இல்லாதோர், இயலாதோருக்கு தானம் செய்ய, புண்ணிய பலன்கள் பெருகும்.

மகாலட்சுமியை வழிபட்டு அவள் அருளால் சகல ஐஸ்வர்யங்களும் பெறுவோம்.

-மு.ரா.சுந்தரமூர்த்தி.

Most Popular

இந்தியாவில் 24 மணிநேரத்தில் 52,509 பேருக்கு கொரோனா : 857 பேர் பலி!

இதுவரை உலகம் முழுவதும் 1 கோடியே 86 லட்சத்து 91 ஆயிரத்து 659 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 7 லட்சத்து 03 ஆயிரத்து 371 பேர் பலியாகி...

அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்ட டெல்லியில் இருந்து புறப்பட்டார் பிரதமர் மோடி

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல்நாட்டு விழா இன்று நடக்கிறது. இதில் மொத்தம் 200 பேருக்கு பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வேறு யாரும்...

கன்னியாகுமரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,533 ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,063பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த...

வேலூரில் மேலும் 206 பேருக்கு கொரோனா : பாதிப்பு எண்ணிக்கை 6,805 ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,063பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த...