அடுத்த கட்டத்திற்கு செல்ல வழிகாட்டும் வாராகி!

 

அடுத்த கட்டத்திற்கு செல்ல வழிகாட்டும் வாராகி!

கலியுகத்தில் கண்கண்ட தெய்வமான வாராகியை பஞ்சமி திதியில் விரதம் இருந்து வணங்கினால் நினைத்த காரியம் நிறைவேறும். நமக்கு எப்போதெல்லாம் துன்பம் அல்லது நம்முடைய வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு சென்று போக முடியாத சூழல் ஏற்படுதோ அப்போது வராகி அம்மனை மனமுருகி வழிபட்டால் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வழிக்காட்டுவாள். எதிர்நோக்க சக்தி அதிகமாக இருக்கும் எனவே எல்லாவற்றையும் முன்னோக்கி பார்த்து நமது கஷ்டங்களை போக்குவாள் வாராகி அம்மன். அதுமட்டுமல்லாமல் இவள் சொல்லும் சொற்களில் சக்திகள் மிக அதிகம். எனவே, இவள் ஒரு வாக்கை நமக்கு அளித்துவிட்டாள் என்றால் அது நிச்சயம் நடந்து விடும்.

அடுத்த கட்டத்திற்கு செல்ல வழிகாட்டும் வாராகி!

சப்தகன்னியரில் ஒருவரான வாராகி அம்மன், திருமாலின் வராக அம்சமாக கருதப்படுகிறார். இவர் வராகமெனும் பன்றி முகத்தையும், எட்டு கரங்களையும் உடையவர். பின் இருகரங்களில் தண்டத்தினையும், கலப்பையையும் கொண்டவர். இவர் கருப்புற நிற ஆடையுடுத்தி சிம்மவாகனத்தில் அமர்ந்திருக்கிறார். வராகி என்ற பெயரைக் கேட்டதும் பக்தி மட்டுமன்றி பயமும் பலருக்குத் தோன்றுவது இயற்கை. ஆனால் அச்சத்தை நீக்கி அன்னையாய் அரவணைத்துக் காப்பவள் இத்தேவி என்பதே உண்மை.

பயம் நீக்கி ஜெயம் அருள வல்லவள். கலியுகத்தில் கண்கண்ட தெய்வமான வாராகியை வணங்கினால் பகைவரை அழித்து பக்தரை காத்திடுவாள். வராகி தேவியை வணங்கினால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். வாக்கு பலிதமாகும். எதிரிகள் நண்பர்கள் ஆவர். அன்பால் அனைவரையும் வெல்லலாம். துர்தேவதைகள் அண்டமுடியாது. கொடிய ஏவல், பில்லி சூனியத்தில் இருந்தும் காப்பாற்றுவாள். நினைத்த காரியம் நிறைவேறும். திருமணத்தடைகள் விலகும். புத்திரபாக்கியம் கிடைக்கும். பஞ்சமி திதியும், திங்கட் கிழமையும் இணைந்த இந்நாளில் விரதம் இருந்து வழிபட்டால் மனநல பாதிப்புகள் நீங்கும்.

நமக்கு இருக்கும் தீராத கஷ்டமாக இருந்தாலும், தீராத நோயாக இருந்தாலும், தீராத மன கஷ்டம், பணக்கஷ்டம், எப்படிப்பட்ட கஷ்டமாக இருந்தாலும் வாராகி அம்மனை நினைத்து விரதம் இருந்து தலைவாழை இலை விரித்து, அதில் பச்சரிசியை கொட்டி பரப்பி, அதன் மேல் ஒரு தேங்காயை உடைத்து இரண்டுமுடிகளாக வைத்து, அதில் இலுப்ப எண்ணெய் ஊற்றி, சிவப்பு திரி போட்டு, தீபம் ஏற்றினால் போதும். இந்த பரிகாரத்தை உங்கள் வீட்டின் அருகில் வாராகி அம்மன் கோயில் இருந்தால் அங்கு செய்யலாம். கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே சிறிய வாராகி அம்மன் திருவுருவப் படத்தை வைத்து அதன்முன் செய்து வரலாம்.

அடுத்த கட்டத்திற்கு செல்ல வழிகாட்டும் வாராகி!

வாராகி அம்மனுக்கு சிவப்பு மலர் மிகவும் விருப்பமானது அதிலும் சிவப்பு தாமரை மிகவும் பிடிக்கும். பஞ்சமி திதி அன்று விரதம் இருந்து வாரகியை மனதார நினைத்து வழிபடுவது நல்ல பலனைத்தரும். வாராகி அம்மனுக்கு பூண்டு கலந்து தோல் நீக்கப்படாத உளுந்து வடை, நவதானிய அடை, மிளகு சேர்த்த வடை, வெண்ணெய் நீக்காத தயிர்சாதம், நவதானிய அடை, தோசை இவை அனைத்தும் மிகவும் பிடிக்கும். கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவள் இந்த அன்னை. ஒப்பற்ற சக்தியாக உலகத்திற்கு மங்களங்கள் அருளும். வராகியின் பாத கமலங்களைப் பற்றி நிர்மலமான தூய வாழ்வு பெறுவோம். வழிபாட்டு மந்திரங்கள்

வராஹி மாலையில் ஒரு பாடல்…

இருகுழை கோமளம் தாள்புட்ப ராகம்

இரண்டுகண்ணும்

குருமணி நீலம் கை கோமேதகம் நகம் கூர்வயிரம்

திருநகை முத்துக்கனிவாய் பவளம் சிறந்த வல்லி

மரகதம் நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே!

பஞ்சமி தினங்களில் தூப தீப ஆராதனையுடன் இந்தப் பாடலையும் பாடி மனமுருகி வாராகிதேவியை வழிபட, அனவரதமும் நமக்குத் துணை நிற்பாள்.

-வித்யா ராஜா