darbar
  • January
    29
    Wednesday

Main Area

Main



வரகு சர்க்கரைப் பொங்கல்

வரகு சர்க்கரைப் பொங்கல்
வரகு சர்க்கரைப் பொங்கல்

சர்க்கரைப் பொங்கல் என்றதுமே நம்மில் பலருக்கு நாவில் எச்சில் ஊறும். அதிலும் நெய் மணக்க , மணக்க கோவிலில் தரும் சர்க்கரை பொங்கலுக்கு நம்மில் பலர் அடிமை. பொதுவாக பச்சரிசியிலேயே பொங்கல் செய்து சாப்பிட்டிருப்போம். சிறுதானியங்களில் ஒன்றான வரகரிசியில் ஒரு முறை பொங்கல் செய்து சாப்பிட்டு பாருங்கள்.  நார்ச்சத்து நிறைந்த ஆரோக்கியமான சுவை மிகுந்த இந்த வரகரிசி சர்க்கரை பொங்கல் நம் வாராந்திர உணவுப் பட்டியலில் இடம் பெற்று விடும்.

varagu sweet pongal

தேவையான பொருட்கள்
வரகு - 3/4கப்
பாசிபருப்பு - 2டேபிள் ஸ்பூன்
காய்ச்சிய பசும் பால் - 1/2டம்ளர்
வெல்லம் - 1/2கப்
ஏலக்காய் பொடி - 1சிட்டிகை
முந்திரி பருப்பு -10
நெய் - 50கி
உலர் திராட்சை - 10

செய்முறை
வரகு அரிசி மற்றும் பாசிபருப்பை 2 நிமிடம் வெறும் கடாயில் சிவக்க வறுத்துக் கொள்ளவேண்டும். 2கப் தண்ணீர் , காய்ச்சிய பால் சேர்த்து குக்கரில் 2 விசில் விட்டு குழைய வேகவைக்கவும். தனியாக ஒரு கடாயில் வெல்லத்தை 1/2கப் தண்ணீரில் கொதிக்கவிட்டு வடிகட்டி வைத்துக் கொள்ளவும். வெந்த அரிசி கலவையில் வெல்லத்தண்ணீரை சேர்த்து கட்டி இல்லாமல் கிளறி விட வேண்டும். முந்திரி பருப்பு மற்றும் உலர்ந்த திராட்சையை போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.

varagu sweet pongal

அரிசி மற்றும் வெல்லக் கலவையில் சேர்க்கவேண்டும். நெய் மற்றும் ஏலக்காய், பச்சைக் கற்பூரம் சேர்க்கவேண்டும்.  சூடான, சுவையான, ஆரோக்கியமான வரகு சர்க்கரைப் பொங்கல் தயார்.

2018 TopTamilNews. All rights reserved.