ஈரோட்டில் VAOக்கள் இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டம்

 

ஈரோட்டில் VAOக்கள்  இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டம்

ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தினர் இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜகோபால் தலைமை தாங்கினார்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது: ‘’ஈரோடு கோட்டத்தில் பணிபுரியும் விஏஓ.,க்களுக்கு நடப்பாண்டு பணியிட மாறுதல் வழங்க கோரி கடந்த மாதம் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சைபுதீன், பொது பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு வரும் செப்.,மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படும் என உறுதி அளித்தார். ஆனால், அவர்கள் அளித்த வாக்குறுதியின்படி கலந்தாய்வு நடத்தவில்லை. அதற்கு உண்டான எவ்வித சாத்தியக்குறுகளும் தெரியவில்லை.

ஈரோட்டில் VAOக்கள்  இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டம்

இதனால், விஏஓ.,க்களுக்கான பொது பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நடத்தப்படும் வரை எங்களது காத்திருப்பு போராட்டம் தொடரும், என்றார். இதே கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் வளாகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் மண்டல தலைவர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த இரு போராட்டத்திலும் ஈரோடு, பெருந்துறை, மொடக்குறிச்சி, கொடுமுடி போன்ற பகுதிகளின் விஏஓ.,க்கள் பலர் கலந்து கொண்டனர்.