விவசாய கடன் பெற அடங்கல் தராத விஏஓ… வேதனையில் விவசாயி தற்கொலை!

 

விவசாய கடன் பெற அடங்கல் தராத விஏஓ… வேதனையில் விவசாயி தற்கொலை!

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருகே கிராம நிர்வாக அலுவலர் நிலத்திற்கு அடங்கல் தர மறுத்ததால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள குத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் மணி (60). விவசாயி. இவரது மனைவி பரிமளா. இந்த நிலையில், மணி, சில நாட்களுக்கு முன்பு விவசாய கடன் பெறுவதற்காக, குத்தனூர் கிராம நிர்வாக அலுவலர் சந்திரனிடம், தனது நிலத்திற்கான அடங்கல் வழங்கும் படி கேட்டுள்ளார். ஆனால், அவர் வழங்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

விவசாய கடன் பெற அடங்கல் தராத விஏஓ… வேதனையில் விவசாயி தற்கொலை!

இதனால் மனமுடைந்த மணி, நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்வதற்கு முன்னதாக, தனது இறப்புக்கு காரணம் கிராம நிர்வாக அலுவலர் சந்திரன் மற்றும் கண்ணாயிரம் என்பவர்கள் தான் காரணம் என கூறி சட்டைப்பையில் கடிதம் ஒன்றை எழுதிவைத்திருந்தார்.இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், இதுகுறித்து பிரம்மதேசம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடங்கல் வழங்காததால் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குத்தனூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.