“வன்னியர் இட ஒதுக்கீடு தற்காலிகமானது” – அதிமுக அமைச்சர் பரபரப்பு பேச்சு!

 

“வன்னியர் இட ஒதுக்கீடு தற்காலிகமானது” – அதிமுக அமைச்சர் பரபரப்பு பேச்சு!

வன்னியர் இட ஒதுக்கீடு தற்காலிகமானதுதான்; மீண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்

“வன்னியர் இட ஒதுக்கீடு தற்காலிகமானது” – அதிமுக அமைச்சர் பரபரப்பு பேச்சு!

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டுமென பாமக நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்த நிலையில் சமீபத்தில் இந்த கோரிக்கை சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என சட்டமன்றத்திலேயே அறிவித்ததுடன் இதற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் ஒப்புதல் அளித்து விட்டார். சட்டமன்றத் தேர்தலில் பாமகவுடன் கூட்டணி அமைப்பதற்காக அதிமுக வன்னியர் இடஒதுக்கீட்டை அமல்படுத்தியது. இதை மற்ற கட்சியினரும், பிற சமூகத்தினரும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

“வன்னியர் இட ஒதுக்கீடு தற்காலிகமானது” – அதிமுக அமைச்சர் பரபரப்பு பேச்சு!

இந்நிலையில் திருமங்கலம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அங்கு பொட்டிப்புரம் , சித்திரெட்டிபட்டி, மீனாட்சிபுரம் , சவுடார்பட்டி உள்ளிட்ட இடங்களில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு உள்ளிட்ட 20 சதவீத இட ஒதுக்கீடு என்பது தற்காலிகமானது தான். அது ஆறு மாத காலத்திற்கு மட்டும் தான் செல்லும் . மீண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படும்.ஆனால் தற்போது இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறித்து மக்களிடம் செல்வாக்கை பெறாதவர்கள் திட்டமிட்ட பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள் ” என்றார்.