முக்குலத்தோர் வாக்குகளை அறுவடை செய்யும் தினகரன்… வன்னியர் விவகாரத்தில் சிக்கிய ஓபிஎஸ்!

 

முக்குலத்தோர் வாக்குகளை அறுவடை செய்யும் தினகரன்… வன்னியர் விவகாரத்தில் சிக்கிய ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவையில் வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இது தற்காலிகமானது என்றும், ஆறு மாதங்களுக்குப் பிறகு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முறையாக இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என அரசு கூறியிருந்தது. இது தேர்தலுக்காக வன்னியர்கள் வாக்குகளைக் கவர அறிவிக்கப்பட்டது என எதிர்க்கட்சிகள் முழங்கின. குறிப்பாக எடப்பாடி தொகுதியில் பெருவாரியான வன்னியர்கள் இருப்பதாலும் முதல்வருக்கு பெர்சனலான பலனும் இதில் அடங்கியிருப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

முக்குலத்தோர் வாக்குகளை அறுவடை செய்யும் தினகரன்… வன்னியர் விவகாரத்தில் சிக்கிய ஓபிஎஸ்!

இந்தச் சட்டத்தை பாமக ராமதாஸ் முதல் பல்வேறு வன்னியர் சமுதாய அமைப்புகளும் வரவேற்றன. ஆனால் இதற்கு நேரெதிராக முக்குலத்தோர் அதிகமாக இருக்கும் தென் மாவட்டங்களில் எதிர்ப்பலையை உருவாக்கியிருக்கிறது. குறிப்பாக 68 சாதிகள் அடங்கிய சீர்மரபினர் பிரிவினருக்குக் கடும் அதிருதியை ஏற்படுத்தியுள்ளது. அந்த சமுதாய அமைப்பினர் அதிமுகவுக்கு எதிராகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பெரும்பாலும் தென் மாவட்ட அமைச்சர்கள் பிரச்சாரம் செய்ய முடியாத சூழல் உருவாகியிருக்கிறது. இந்த அதிருப்தியில் அமமுகவிடம் வாக்கைத் தாரைவார்த்து களம் திமுக வசம் செல்லும் வாய்ப்பும் அதிகமாக இருக்கிறது.

முக்குலத்தோர் வாக்குகளை அறுவடை செய்யும் தினகரன்… வன்னியர் விவகாரத்தில் சிக்கிய ஓபிஎஸ்!

கடந்த வாரம் கூட திருமங்கலம் தொகுதியில் பிரச்சாரம் செய்த அமைச்சர் ஆர்பி உதயகுமார், முக்குலத்தோரை சமாளிக்க வன்னியர் இட ஒதுக்கீடு தற்காலிகமானது தான் என சத்தியமெல்லாம் செய்தார். இதே நிலைமை தான் மதுரை, தேனி பகுதிகள் முழுக்க இருக்கிறது. இது ஒருபுறமென்றால் வன்னியர்கள் வாக்குகளைக் குறிவைத்து அறிவிக்கப்பட்ட இடஒதுக்கீடு என்பது அப்பட்டமாகியுள்ளது. அமைச்சர்களின் தற்காலிகமான பேச்சு பாமக தவிர்த்த இன்னபிற வன்னியர் சமுதாய மக்களை அதிருப்திக்கு உள்ளாக்கியிருக்கிறது.

முக்குலத்தோர் வாக்குகளை அறுவடை செய்யும் தினகரன்… வன்னியர் விவகாரத்தில் சிக்கிய ஓபிஎஸ்!

தற்போது துணை முதலமைச்சர் ஓபிஎஸ்ஸும் இதே கருத்தை வழிமொழிந்திருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். தனியார் நாளிதழுக்குப் பேட்டியளித்த ஓபிஎஸ், “20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.6 சதவீதம் உள் ஒதுக்கீடு அளித்து இருப்பது என்பது இடைக்கால ஏற்பாடு தான். இது இறுதியானது அல்ல. சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்தபிறகு நிரந்தரமான உள் ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு வெளியாகும்” என்று கூறியுள்ளார்.

முக்குலத்தோர் வாக்குகளை அறுவடை செய்யும் தினகரன்… வன்னியர் விவகாரத்தில் சிக்கிய ஓபிஎஸ்!

ஓபிஎஸ் இப்படி பேசியிருப்பதற்குக் காரணம் போடியில் திமுக சார்பில் போட்டியிடும் தங்க தமிழ்ச்செல்வன் தான். அங்கு கள நிலவரம் 50-50 என்ற இழுபறியில் தான் சென்று கொண்டிருக்கிறது. இதனால் இதனைச் சொல்வதற்கு ஓபிஎஸ்ஸுக்கு இயல்பாகவே அழுத்தம் உருவாகிவிட்டது. தும்பை விட்டு வாலை பிடித்த கதையாக முக்குலத்தோர் வாக்குகளும் வன்னியர்களின் வாக்குகளும் சிதறிப் போகும் சூழல் உருவாகியிருக்கிறது. விவகாரம் கை மீறி போய்க் கொண்டிருக்கும் நிலையில் அதிமுக என்ன வியூகம் வைத்திருக்கிறது என்பது தலைமைக்கே வெளிச்சம்.