பாலாற்றின் கிளை ஆறு சீரமைப்பு பணிகள் தொடக்கம்

 

பாலாற்றின் கிளை ஆறு சீரமைப்பு பணிகள் தொடக்கம்

திருப்பத்தூர்

வாணியம்பாடியில் உள்ள பாலாற்றின் கிளை ஆற்றை புனரமைக்கும் பணியை, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் இன்று தொடங்கிவைத்தார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகரில் பாலாற்றில் இருந்து பிரியும் கிளையாறு ஒன்று, ராமையந்தோப்பில் கல்லாறு உடன் கலந்து, சுமார் 4 கிலோ மீட்டர் சென்று மீண்டும் பாலாற்றில் கலக்கிறது. இந்த நிலையில் கல்லாற்றில் கழிவுநீர், குப்பைகள், விலங்குகளின் கழிவு உள்ளிட்டவை கலந்து மாசு அடைந்து வந்தது. இதனை தடுக்கும் விதமாக, பொதுப்பணித்துறை சார்பில் 2 கோடி ரூபாய் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டது.

பாலாற்றின் கிளை ஆறு சீரமைப்பு பணிகள் தொடக்கம்

அதன் முதற்கட்டமாக, ஷாகிராபாத் முதல் ஜனதாமேடு பாலம் வரை சுமார் 600 மீட்டர் தொலைவுக்கு கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி இன்று தொடங்கியது. இதனை ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் கலந்துகொண்டு, பூமி பூஜை போட்டு பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.