வாணியம்பாடி எருது விடும் விழா- 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு…

 

வாணியம்பாடி எருது விடும் விழா- 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு…

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை பகுதியில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு இன்று மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்தும், ஆந்திர மாநிலம் சித்தூர், குப்பம் ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இந்த போட்டியில் திருப்பத்தூர் கோட்டாட்சியர் காயத்ரி சுப்ரமணியம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, போட்டியை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் பந்தைய தூரத்தை மின்னல் வேகத்தில் கடந்துசென்றன.

வாணியம்பாடி எருது விடும் விழா- 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு…

இதனை வாணியாம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆர்முடன் கண்டுகளித்தனர். போட்டியில் பந்தைய தூரத்தை அதிவேகமாக எட்டிய, வேலூர் மாவட்டம் லத்தேரியை சேர்ந்த இந்துமதி என்பவரது காளை முதல் பரிசாக 70 ஆயிரம் ரூபாய் வென்றது. இரண்டாம் பரிசை வென்ற திருப்பத்தூரை சேர்ந்த அருண் என்பவரது காளைக்கு 55 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசை வென்ற பேர்ணாம்பட்டை சேர்ந்த ஜோசப் என்பவரது காளைக்கு 40 ஆயிரம் ரூபாய் பரிசுதொகை வழங்கப்பட்டது. எருதுவிடும் போட்டியை ஒட்டி, வாணியம்பாடி டிஎஸ்பி பழனிசெல்வம் தலைமையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.