மதுஅருந்த பணம் இல்லாததால் பேரனை தாக்கி வெள்ளி அரைஞாண் கயிறு பறிப்பு – தாத்தா உள்பட 2 பேர் கைது

 

மதுஅருந்த பணம் இல்லாததால் பேரனை தாக்கி வெள்ளி அரைஞாண் கயிறு பறிப்பு – தாத்தா உள்பட 2 பேர் கைது

திருப்பத்தூர்

வாணியம்பாடியில் மதுஅருந்த பணம் இல்லாததால், சொந்த பேரனை கொலைசெய்ய முயன்று, அவரது வெள்ளி அரைஞாண் கயிற்றை பறித்துச்சென்று மது அருந்திய கொடூர தாத்தா உட்பட 2 பேரை போலீசார் கைதுசெய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகரை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி கணேசன். இவருக்கு சித்ரா என்ற மனைவியும், சதீஷ்(10) என்ற மகனும் உள்ளனர். பெற்றோர் இருவரும் நாள்தோறும் காலையில் வேலைக்கு சென்றுவிட்டு, மாலையில் வீடு திரும்புவது வழக்கம். இதனால் தாத்தா முறையிலான வேலு என்பவரின் பாதுகாப்பில் சிறுவன் இருந்து வந்துள்ளான்.

மதுஅருந்த பணம் இல்லாததால் பேரனை தாக்கி வெள்ளி அரைஞாண் கயிறு பறிப்பு – தாத்தா உள்பட 2 பேர் கைது

இந்த நிலையில் வேலு, அதேபகுதியை சேர்ந்த தனது நண்பர் பாலச்சந்திரன் என்பவருடன் இணைந்து நாள்தோறும் மதுஅருந்தி வந்துள்ளார். நேற்று மதுஅருந்த பணம் இல்லாததால் விரக்தியில் இருந்த வேலு, பாலச்சந்திரனுடன் சேர்ந்து பேரன் அணிந்திருந்த வெள்ளி அரைஞாண் கயிற்றை கொள்ளையக்க முடிவு செய்தார். இதற்காக, சிறுவனை பொய் சொல்லி பாலச்சந்திரன் உடன் இருசக்கர வாகனத்தில் அனுப்பி வைத்துள்ளார். அப்போது, சிறுவனை வாணியம்பாடி நியூடவுன்  பகுதியில் ஒரு மைதானத்திற்கு அழைத்துச்சென்ற பாலச்சந்திரன், அவன் அணிந்திருந்த வெள்ளி அரைஞாண் கயிற்றை அறுக்க முயன்றுள்ளார். அதற்கு சிறுவன் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த பாலச்சந்திரன், சிறுவனை கழுத்தை நெரித்து கொலைசெய்ய முயற்சி செய்துள்ளார். இதில் சிறுவன் மயங்கியதால், அவன் உயிரிழந்ததாக கருதி புதரில் வீசிவிட்டு, வெள்ளி அரைஞான் கயிறை பறித்து சென்றார். பின்னர் அதனை கடையில் ரூ.2,300 க்கு விற்று, அந்த பணத்தில் இருவரும் சேர்ந்து மது அருந்தி உள்ளனர்.

மதுஅருந்த பணம் இல்லாததால் பேரனை தாக்கி வெள்ளி அரைஞாண் கயிறு பறிப்பு – தாத்தா உள்பட 2 பேர் கைது

இதனிடையே, மயக்க நிலையில் இருந்த சிறுவன் திடீரென வாணியம்பாடியில் நேற்று மாலை பெய்த மழையால் மயக்கம் தெளிந்து வீட்டிற்கு ஓடி வந்து, நடந்தவற்றை தனது தாயிடம் தெரிவித்தான். சிறுவனை வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்த சித்ரா, இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் தலைமறைவாக இருந்த பாலச்சந்திரனை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், மதுகுடிக்க பணம் இல்லாததால் வேலுவுடன் இணைந்து சிறுவனிடம் நகைப்பறிக்க முயன்றது அம்பலமானது. இதன தொடர்ந்து வேலுவை கைதுசெய்த போலீசார், இருவரையும் வாணியம்பாடி குற்றவியல் நீதி துறை நடுவரிடம் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். .