• August
    24
    Saturday

Main Area

Main



'குறும்படம் போட்டு காமிக்க சொல்லுவன்': வனிதாவின் அடுத்த டார்கெட் இவர் தானா?

வனிதா
வனிதா
Loading...

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் 3 தொடங்கி 53 நாட்கள் ஆகியுள்ளது. வனிதா, மீரா வெளியேறிய பின்பு நிகழ்ச்சியில் சுவாரசியம் இல்லாத காரணத்தினால் போர் அடிப்பதாக ரசிகர்கள் குற்றச்சாட்டு வைத்தனர். அதனால் பிக் பாஸ் டாஸ்க் என்ற பெயரில் மீண்டும் வனிதாவை உள்ளே அனுப்பி ஆட்டத்தை விறுவிறுப்பாகியுள்ளனர். 

இந்த நிலையில் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. அதில் இன்றைக்கான டாஸ்க்காக ஆண்கள் மற்றும் பெண்கள் என்று இரு அணிகளாகப் பிரிந்து விவாதம் செய்வது போல் தெரிகிறது. அப்போது வனிதா, தர்ஷனிடம் 'உன்னோட இதயத்தில் வைத்து கிழித்தல் மட்டுமே அந்த வலி உனக்கு தெரியும். உனக்கு எதுக்கு இவளோ கோபம் வருகிறது' என்று கேட்க உடனே தர்ஷன் எனக்கு வரவேயில்லை என்று கூறுகிறார். 

அதைத்தொடர்ந்து வனிதா, 'நான் குறும்படம் போட்டு காமிக்க சொல்லிடுவன்' என்று சொல்ல உடனே எப்போதும் அமைதியாக இருக்கும் சாண்டி, லாஸ்லியாவே அவரை எதிர்த்து கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளனர். இதிலிருந்து வனிதாவின் அடுத்த டார்கெட் தர்ஷன் என்பது தெளிவாகத் தெரியவந்துள்ளது.   

2018 TopTamilNews. All rights reserved.