darbar
  • January
    26
    Sunday

Main Area

Main



விஜய் தயாரிக்கும் முதல் படத்தில் இணைந்த பிரபல சின்ன திரை நடிகை!

விஜய் தேவரகொண்டா
விஜய் தேவரகொண்டா

சென்னை: நடிகர் விஜய் தேவரகொண்டா தெலுங்கில் தயாரிக்கும் முதல் படத்தில் நடிகை வாணி போஜன் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் ரசிகர்களின் மனத்தை கொள்ளை அடித்தவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. அப்படத்தின் மூலம் கோலிவுட்,டோலிவுட் என தனக்கு என ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளார். அதை தொடர்ந்து கீதா கோவிந்தம்’, ‘டாக்ஸிவாலா’ போன்ற திரைப்படங்கள் நடித்து ஹிட் கொடுத்துள்ளார்.

vani bhojan

தெலுங்கில் வெற்றியானதையடுத்து தமிழில் நோட்டா படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் அப்படம்  எதிர்பார்த்த அளவுக்குச் செல்லவில்லை என்றாலும் பெண் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு இன்னும் மவுசு குறையாமலே உள்ளது. 

vani bhojan

இந்நிலையில் தற்போது விஜய் தேவரகொண்டா தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு வெளியான பெல்லி சூப்புடு படத்தை இயக்கிய தருண் பாஸ்கர் இதில் ஹீரோவாக நடித்துவருகிறார். சென்னையைச் சேர்ந்த குறும்பட இயக்குநர் சமீர் இயக்கிவரும் இப்படத்தில் கதாநாயகியாக பிரபல சின்ன திரை நடிகை வாணி போஜன் நடித்து வருகிறார்.

vani bhojan

மேலும் வாணி போஜன் ஏற்கனவே நிதின் சத்யா தயாரிக்கும் என்4 படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: கோவாவில் பெர்த்டே பார்ட்டி; ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்ட ஸ்ருதி

2018 TopTamilNews. All rights reserved.