வண்டலூர் சிங்கங்களுக்கு வந்தது கொரோனா இல்லை…அதிகம் பாதிப்பு ஏற்படுத்தும் கேனைன் டிஸ்டெம்பர் வைரஸ்!

வண்டலூர் சிங்கங்களுக்கு வந்தது கொரோனா இல்லை…அதிகம் பாதிப்பு ஏற்படுத்தும் கேனைன் டிஸ்டெம்பர் வைரஸ்!

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் கடந்த மே 26-ஆம் தேதி சிங்கங்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை கழகத்தை சேர்ந்த மருத்துவ குழுவினர் சிங்கங்களின் சளி மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தியதில் அவற்றுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. அத்துடன் 9 வயதில் நீலா என்ற பெண் சிங்கம் கடந்த 3ஆம் தேதி கொரோனாவால் உயிரிழந்தது. அத்துடன் கவிதா என்ற 23 வயது சிங்கம், புவனா என்ற 19 வயது சிங்கம் என இரண்டு பெண் சிங்கங்கள் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அதைப்போல் 19 வயதுடைய ராஜன் என்ற ஆண் சிங்கம்புதிய தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் அதை தனிமைப்படுத்தி தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

வண்டலூர் சிங்கங்களுக்கு வந்தது கொரோனா இல்லை…அதிகம் பாதிப்பு ஏற்படுத்தும் கேனைன் டிஸ்டெம்பர் வைரஸ்!

சமீபத்தில் மீண்டும் இந்த சிங்கங்களுக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று ஏற்படவில்லை எனத் தெரியவந்துள்ளது. ஆனால் அதை விட விலங்குகளுக்கு அதிகம் பாதிப்பு ஏற்படுத்தும் கேனைன் டிஸ்டெம்பர் வைரஸ் எனும் இணை நோய் காணப்பட்டது. இதனால் தான் நீலா சிங்கம் இறந்தது தெரியவந்துள்ளது. மேலும் ஒரு சிங்கத்திற்கு கேனைன் டிஸ்டெம்பர் வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வண்டலூர் சிங்கங்களுக்கு வந்தது கொரோனா இல்லை…அதிகம் பாதிப்பு ஏற்படுத்தும் கேனைன் டிஸ்டெம்பர் வைரஸ்!

கேனைன் டிஸ்டெம்பர் வைரஸ் நாய்களின் மூலம் பரவும். உயிரியல் பூங்காவில் நாய்கள் அதிகளவில் சுற்றி திரிவதால் அவற்றின் மூலம் தொற்று பரவியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.குஜராத்தின் கிர் காடுகளில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்ட சிங்கங்கள் பலியாகின என்பது குறிப்பிடத்தக்கது.