தேசத்திற்கு சேவை செய்வதற்காக அயராது உழைப்பேன் – வானதி சீனிவாசன்

 

தேசத்திற்கு சேவை செய்வதற்காக அயராது உழைப்பேன் – வானதி சீனிவாசன்

பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவர்கள், தேசியச் செயலாளர்கள், தேசிய பொதுச் செயலாளர்கள், செய்தி தொடர்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டன. ஆனால் அந்த பட்டியலில், தமிழகத்தைச் சேர்ந்த பாஜகவின் மூத்த தலைவர்கள் ஒருவர் பெயர் கூட இல்லததால் அதிருப்தி நிலவிவந்த நிலையில், வானதி சீனிவாசனை மகளிரணி தேசிய தலைவராக நியமித்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெபி நட்டா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள வானதி சீனிவாசன், “இந்த வாய்ப்பை வழங்கிய தேசிய தலைவர் ஜெபி நட்டாவுக்கு நான் முழு மனதுடன் நன்றிக்கூற விரும்புகிறேன். மகளிரணி தேசிய தலைவராக என்னை நியமித்ததற்கு கட்சிக்கு நன்றி கூறுகிறேன்.

தேசத்திற்கு சேவை செய்வதற்காக அயராது உழைப்பேன் – வானதி சீனிவாசன்

கட்சியின் அமைப்பு செயலாளர் பி.எல் சந்தோஷ்ஷின் வழிகாட்டுதல் மற்றும் ஆசீர்வாதங்களால் தேசத்திற்கு சேவை செய்வதற்காக அயராது உழைப்பேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.