“உங்க வெள்ளை அறிக்கைய இப்போ யார் கேட்டா?” – பிடிஆரிடம் வம்பிழுக்கும் வானதி சீனிவாசன்!

 

“உங்க வெள்ளை அறிக்கைய இப்போ யார் கேட்டா?” – பிடிஆரிடம் வம்பிழுக்கும் வானதி சீனிவாசன்!

வரும் 13ஆம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியில் அமர்ந்துள்ளதால் முதல் பட்ஜெட் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாம தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக வேளாண் துறைக்கென தனி பட்ஜெட் 14ஆம் தேதி தாக்கலாகிறது. ஆனால் இதற்கு முன்னால் இன்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கையை வெளியிடுவார் என்று கூறப்பட்டது. கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியின் வருவாய் மற்றும் செலவுகளைக் குறிப்பிட்டு இந்த அறிக்கையை வெளியிட்டார்.

“உங்க வெள்ளை அறிக்கைய இப்போ யார் கேட்டா?” – பிடிஆரிடம் வம்பிழுக்கும் வானதி சீனிவாசன்!

இதற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அதிமுக ஆட்சியில் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து துறையிலும் மின்துறையிலும் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வாங்கிய கடன்களுக்காக ஒரு நாளைக்கு 87 கோடி ரூபாய் வட்டி செலுத்தி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் வாங்கப்பட்ட 3 லட்சம் கோடி ரூபாய் பொதுக்கடனில் 50% வருவாய் பற்றாக்குறைக்கான செலவினம். தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2.63 லட்சம் ரூபாய் கடன் உள்ளது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது 2014-15 ஆண்டில் குறைவாக இருந்த தமிழ்நாட்டின் கடன், அதன்பிறகு பல மடங்கு அதிகரித்தது. அதிமுக அரசு கூறிய கடன் கணக்கு சரியாக இல்லை” என்றார்.

“உங்க வெள்ளை அறிக்கைய இப்போ யார் கேட்டா?” – பிடிஆரிடம் வம்பிழுக்கும் வானதி சீனிவாசன்!

இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக வாங்கிய கடன்கள் அனைத்தும் வளர்ச்சி திட்டங்களுக்காக பயன்படுத்தப்பட்டது எனவும், அதிமுக ஆட்சியில் நிர்வாக சீர்கேடு ஏற்பட்டிருப்பதாக கூறுவது தவறு என பதிலடி கொடுத்திருந்தார். அதேபோல முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “வெள்ளை அறிக்கையில் எந்தவித புதிய விஷயம் இல்லை. கடந்த திமுக ஆட்சியில் வைக்கப்பட்ட கடனுக்கு அதிமுக ஆட்சியில் வட்டி கட்டினோம். வெள்ளை அறிக்கை மூலம் மக்களை திசை திருப்புகின்றனர்” என்றார்.

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவான வானதி சீனிவாசனுக்கும் நிதியமைச்சருக்கும் ஏற்கெனவே வாய்க்கால் தகராறு இருக்கிறது. இச்சூழலில் வெள்ளை அறிக்கை குறித்தும் கமெண்ட் அடித்திருக்கிறார். அவரது ட்வீட்டில், “தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கேட்டால் வெள்ளை அறிக்கையை பதிலாக கொடுக்காமல் இருந்தால் நல்லது” என்று குறிப்பிட்டுள்ளார். பிடிஆர் வானதியை ட்விட்டரில் பிளாக் செய்து வைத்திருப்பதால் முதலமைச்சர் ஸ்டாலினை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.