“டாஸ்மாக் அருகிலேயே தடுப்பூசி முகாம் நடத்துங்க” – வானதி சீனிவாசனின் ஸ்பெஷல் ஐடியா!

 

“டாஸ்மாக் அருகிலேயே தடுப்பூசி முகாம் நடத்துங்க” – வானதி சீனிவாசனின் ஸ்பெஷல் ஐடியா!

கொரோனா இரண்டாம் அலையில் இந்தியாவும், அதிலும் குறிப்பாக தமிழ்நாடும் பெரும் பாதிப்பைச் சந்தித்தன. கொரோனா நம்முடைய அன்றாட வாழ்க்கையோடு வாழ்க்கையாக இயைந்துவிட்டது. ஆகவே அதனுடன் நாம் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் அட்வைஸ் கொடுக்கின்றன. உள்ளபடியே கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும், தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். முன்பை விட இப்போது மக்களிடையே தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு வந்துவிட்டது.

“டாஸ்மாக் அருகிலேயே தடுப்பூசி முகாம் நடத்துங்க” – வானதி சீனிவாசனின் ஸ்பெஷல் ஐடியா!

அதன் காரணமாகவே நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 2.5 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. இருப்பினும் மூன்றாம் அலை வருவதற்குள் 50% மக்களுக்கு தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். அதனால் இந்த எண்ணிக்கையும் வேகமும போதவே போதாது. ஏனென்றால் நம் நாட்டின் மக்கள்தொகை 130 கோடியைத் தாண்டுகிறது. ஆகவே நாளொன்றுக்கு 4 கோடி தடுப்பூசிகளாவது போட்டாக வேண்டும். இன்னும் சில மக்களுக்கு தடுப்பூசி மீது தயக்கம் இருந்துகொண்டு தான் இருக்கிறது. இந்தத் தயக்கத்தை உடைக்கவும் தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுப்படுத்தவும் கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஐடியா சொல்லியிருக்கிறார்.

“டாஸ்மாக் அருகிலேயே தடுப்பூசி முகாம் நடத்துங்க” – வானதி சீனிவாசனின் ஸ்பெஷல் ஐடியா!

பிரதமர் மோடியின் 71ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை அம்மன்குளம் பகுதியில் பெண்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாமை தொடங்கிவைத்தார். அப்போது பேசிய அவர், “பொதுமக்களிடையே இன்னமும் கொரோனா தடுப்பூசி தொடர்பான அச்சம், தயக்கம் உள்ளது. பெண்களிடையே விழிப்புணர்வு அதிகரித்து வந்தாலும், டாஸ்மாக் செல்லும் ஆண்களுக்கு டாஸ்மாக்கில் மது அருந்த முடியாதோ என்ற அச்சம் உள்ளது. ஆகவே தமிழக அரசு டாஸ்மாக் அருகே தடுப்பூசி முகாம் அமைத்தால் விரைவாக தடுப்பூசிகளை செலுத்த முடியும்” என்றார்.