அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக… வருத்தத்தில் பாஜக!

 

அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக… வருத்தத்தில் பாஜக!

அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த தேமுதிக, கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்து விட்டது. 25 தொகுதிகளை எதிர்பார்த்த தேமுதிகவுக்கு அதிமுக, 13 முதல் 17 தொகுதிகளை மட்டுமே கொடுக்க முன்வந்தது. பாஜக, பாமகவுக்கு கொடுக்கப்பட்டதற்கு ஈடாக கூட தொகுதிகளை கொடுக்க ஒத்துழைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தேமுதிக, கூட்டணியில் இருந்து விலகி விட்டது.

அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக… வருத்தத்தில் பாஜக!

தேமுதிகவின் விலகல் அதிமுக எதிர்பார்த்த ஒன்று தான். கேட்கும் தொகுதிகளை கொடுக்காவிடில் தேமுதிக வெளியேறிவிடும் என தெரிந்தே, அதிமுக அதிக தொகுதிகளை கொடுக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் திமுகவுக்கு ஈடாக அதிமுக போட்டியிட வேண்டும் என்பது தான். தற்போதைய நிலவரத்தின் படி, திமுக 177 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக தெரிகிறது. அதை விட அதிக எண்ணிக்கையில் போட்டியிட திட்டமிட்ட அதிமுக, பாஜகவுடன் கைகோர்த்துக் கொண்டு தேமுதிக வெளியேறச் செய்து விட்டதாக பல்வேறு விமர்சனங்கள் எழுகிறது.

அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக… வருத்தத்தில் பாஜக!

இந்த நிலையில், அதிமுகவில் இருந்து தேமுதிக விலகியது வருத்தமளிப்பதாக பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேமுதிக தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் ஏதாவது ஒரு வகையில் தேமுதிகவை கூட்டணியில் இணைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.