தேர்தலில் பாஜக தனித்து போட்டியா?- வானதி சீனிவாசன் பதில்

 

தேர்தலில் பாஜக தனித்து போட்டியா?- வானதி சீனிவாசன் பதில்

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் பாரதிய ஜனதா கட்சி கேந்தரா நிர்வாகிகள் கூட்டத்தில் பாஜக மாநில துணைத்தலைவர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், “தமிழகத்தின் 2ஆம் தலைநகரமாக கோயம்புத்தூர் அறிவித்தால் என்ன? பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற தேர்தலுக்கான பணியை தொடங்கி விட்டது. மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை செய்து வருகிறது. கொரோனா தொற்று அதிகரித்து வருவதை போன்று குணமடைபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. கோவை போன்ற இடங்களில் மருத்துவமனையில் இடம் கிடைப்பது சிரமமாக உள்ளது. அது போன்ற இடங்களில் கூடுதல் வசதிகளை முதலமைச்சர் செய்ய வேண்டும். சென்னையை போல் மாநிலம் முழுவதும் தனி மருந்து பெட்டகம் வழங்க வேண்டும்.

தேர்தலில் பாஜக தனித்து போட்டியா?- வானதி சீனிவாசன் பதில்

மத்திய அரசு மாநில அரசுக்கு 6600 கோடி வழங்கி உள்ளது. அதே போன்று ஜிஎஸ்டி வரி வருவாயையும் வழங்கி உள்ளது. தமிழக அரசு தகுந்த மருத்துவ வசதிகளை செய்து தர வேண்டும். மாநில முதல்வர் நீட் தேர்வை கொரோனா கட்டுக்குள் வந்த பின் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் மற்ற மாநிலங்களில் இருந்து தேர்வு வைக்க கோரிக்கை வைத்துள்ளதால் தேர்வு நடத்தப்படும் என மத்திய அமைச்சகம் கூறி உள்ளது.

மும்மொழி கொள்கையை எதிர்ப்பவர்கள், தாய்மொழியில் தான் 5 ம் வகுப்பு வரை கற்க வேண்டும் என்ற கருத்தை கூற மறுப்பது ஏன்? இந்தி தான் படிக்க வேண்டும் என வற்புறுத்தவில்லை. ஏதாவது ஒரு மூன்றாவது மொழியை கற்க வேண்டும் என்று தான் கூறுகிறோம். தேர்தலில் தனித்து போட்டியா அல்லது கூட்டணியா என்பது குறித்து தலைமை தான் முடிவெடுக்கும்” எனக் கூறினார்.