பாஜகவிடம் அதிமுக பாரபட்சம் காட்டுகிறது: வானதி ஸ்ரீனிவாசன்

 

பாஜகவிடம் அதிமுக பாரபட்சம் காட்டுகிறது: வானதி ஸ்ரீனிவாசன்

கோவையில் மோடியின் மகள் திட்டத்தை பாஜக மகளிர் தேசிய தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் தொடங்கிவைத்தார். மோடியின் மகள் என்ற திட்டத்தை மக்கள் சேவை மையம் சார்பில் 100 பெண் குழந்தைகளுக்கு 10 ஆயிரம் டிடி வழங்கி ஐந்து வருடங்களுக்கு கல்வி உதவி வழங்கும் வகையில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வானதி ஸ்ரீனிவாசன், “பெண் குழந்தைகளுக்கும் , பெண்களுக்கும் பல்வேறு திட்டங்களை மோடி அமல்படுத்தியிருக்கிறார். மனோன்மணியம் சுந்தரானார் பல்கலைக்கழகத்தில் அருந்ததியர் ராயின் பாடம் நீக்கம் குறித்த அறிவிப்பில் ஏபிவிபி எனக்குறிப்பிடப்படவில்லை. பல்கலைக்கழகம் எதனடிப்படையில் நீக்கினார்கள் எனத்தெரியவில்லை. அவசரம் அவசரம் மாக மாற்றவில்லை நான்கு ஆண்டுகளுக்கு பின்னர்தான் பாடம் மாற்றப்பட்டுள்ளது. அரசியல் அழுத்தம் என்பது இதில் இல்லை.

பாஜகவிடம் அதிமுக பாரபட்சம் காட்டுகிறது: வானதி ஸ்ரீனிவாசன்

மத்திய அரசின் திட்டங்களை எடுத்துச்செல்ல, குறிப்பிட்ட ஒரு மதம் தமிழகத்தில் இழிவுசெய்வதை தடுக்க, மக்களிடத்தே விழிப்புணர்வை ஏற்படுத்தவே வேல்யாத்திரை நடத்தபடுகிறது. வேல்யாத்திரை சட்டத்திற்கு எதிராக நடப்பதாக உருவகப்படுத்துகிறார்கள் அதில் உண்மையில்லை. நீதிமன்றம் வேல்யாத்திரை நடத்தக்கூடாது என இடைக்காலத்தடை விதிக்கவில்லை. வழக்கு போட்டால் வழக்கை சந்திக்க தயாராக இருக்கிறோம் . பிற கட்சிகளை விடுத்து ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு தடை விதிப்பதில் பாரபட்சம் உள்ளது” எனக் கூறினார்.