கமல்ஹாசனை பின்னுக்கு தள்ளிய வானதி சீனிவாசன்… கோவை தெற்கில் கடும் போட்டி!

கமல்ஹாசனை பின்னுக்கு தள்ளிய வானதி சீனிவாசன்… கோவை தெற்கில் கடும் போட்டி!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தற்போதைய நிலவரத்தின்படி 157 தொகுதிகளில் திமுகவும் 77 தொகுதிகளில் அதிமுக முன்னிலை வகிக்கின்றன. திமுகவின் வெற்றி உறுதியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு முன்னரே ஸ்டாலினுக்கு வாழ்த்து மழை குவிகிறது.

கமல்ஹாசனை பின்னுக்கு தள்ளிய வானதி சீனிவாசன்… கோவை தெற்கில் கடும் போட்டி!

திமுக, அதிமுகவை தவிர முதல்வர் பதவிக்கு போட்டியிட்டு முன்னிலையில் இருந்த ஒரே கட்சி மக்கள் நீதி மய்யம் தான். அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில் மட்டும் மநீம முன்னிலை வகித்து வந்தது. அங்கு போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் இரண்டாம் இடத்திலும், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் மூன்றாம் இடத்திலும் இருந்து வந்தனர். ஆனால், தற்போது முடிவுகள் தலைகீழாக மாறியுள்ளது.

கமல்ஹாசனை பின்னுக்கு தள்ளிய வானதி சீனிவாசன்… கோவை தெற்கில் கடும் போட்டி!

23 சுற்றுகளின் முடிவில் 45,932 வாக்குகளுடன் வானதி சீனிவாசன் கமல்ஹாசனை பின்னுக்கு தள்ளி முன்னிலை வகிக்கிறார். 45,042 வாக்குகளுடன் கமல்ஹாசன் இரண்டாம் இடத்திலும் 39,413 வாக்குகளுடன் மயூரா ஜெயக்குமார் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். கமல்ஹாசனுக்கும் வானதி சீனிவாசனுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. வெற்றி வாகையை சூடப்போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்..!