‘வேல் யாத்திரை தடை பாரபட்ச செயல்’ – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

‘வேல் யாத்திரை தடை பாரபட்ச செயல்’ – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

பாஜகவின் வேல் யாத்திரைக்கு விதிக்கப்பட்ட தடை பாரபட்சமாக இருப்பதாக வானதி சீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

‘வேல் யாத்திரை தடை பாரபட்ச செயல்’ – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

நவ.6ம் தேதி தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் பாஜகவினர் வேல் யாத்திரை நடத்த முயன்றனர். ஆனால், அதற்கு முன் தினமே யாத்திரைக்கு தடை விதித்து உத்தரவிட்டதால் போலீசார் அவர்களை கைது செய்தனர். கைது செய்தாலும், யாத்திரையை தடுத்தாலும் தடையை மீறி நடத்துவோம் என எல்.முருகன் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். அதனால், யாத்திரை நடைபெறாத வண்ணம் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அரசியல் கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கும் அரசு, யாத்திரைக்கு மட்டும் அனுமதி அளிக்காதது ஏன் என பாஜகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

‘வேல் யாத்திரை தடை பாரபட்ச செயல்’ – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

இந்த நிலையில், பிற கட்சிகளுக்கு மட்டும் அனுமதி அளித்து ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு மட்டும் தடை விதிப்பதில் பாரபட்சம் இருக்கிறது என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். மேலும், சட்டவிரோதமாக வேல்யாத்திரை நடப்பதாக உருவகப்படுத்தப்படுகிறது என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.