12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் – வானதி சீனிவாசன்

 

12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் – வானதி சீனிவாசன்

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த கருத்து கேட்புக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட பொதுத்தேர்வு இன்னும் நடத்தப்படாமல் இருக்கும் நிலையில், பல தரப்பினர் மாணவர்களின் நலன் கருதி தேர்வினை ரத்து செய்யமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து ஆலோசனை நடத்திய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வு அடிப்படையில் தேர்வை ரத்து செய்வதா? இல்லையா? என்பது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.

12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் – வானதி சீனிவாசன்

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டுவிட்டது. இதனால், 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்துமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார், அதன் படி, நாளை கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டு நாளை மறுநாள் இறுதி முடிவு அறிவிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டுமென பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன், தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. நீட் தேர்வு பற்றி தற்போது எந்த ஒரு பேச்சு எழவில்லை என்று கூறினார். மேலும், செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி நிறுவனத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர மத்திய அரசிடம் வலியுறுத்துவேன் என்றும் தெரிவித்தார்.