தண்ணீர் லாரி – வேன் மோதி விபத்து – 4 பேர் உயிரிழப்பு ; 10 பேர் படுகாயம்!!

 

தண்ணீர் லாரி – வேன் மோதி விபத்து – 4 பேர் உயிரிழப்பு ; 10 பேர் படுகாயம்!!

தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் பகுதியில் உலர் பூக்கள் ஏற்றுமதி செய்யும் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் தொழிலாளர்களை பல்வேறு இடங்களிலிருந்து வேன்கள் மூலம் அழைத்துவருவது வழக்கம் . அதன்படி இன்று காலை பெண் தொழிலாளர்களை ஏற்றுக்கொண்டு ஓட்டப்பிடாரம் தாலுகா புதியம்புத்தூர் அருகே வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது அப்பகுதியில் எதிரே வந்த தண்ணீர் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழுந்து அதிவேகமாக வேன் மீது மோதியது.

தண்ணீர் லாரி – வேன் மோதி விபத்து – 4 பேர் உயிரிழப்பு ; 10 பேர் படுகாயம்!!

இந்த விபத்தில் வேனில் இருந்த செல்வராணி , சந்தான லட்சுமி ஆகிய இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த புதியம்புத்தூர் போலீசார், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே மணிமேகலை என்ற பெண்ணும், மற்றொரு பெண்ணும் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கின்றன.

தண்ணீர் லாரி – வேன் மோதி விபத்து – 4 பேர் உயிரிழப்பு ; 10 பேர் படுகாயம்!!

அத்துடன் இந்த விபத்தில் வேன் ஓட்டுநர் பாபு ,லாரி ஓட்டுநர் பண்டாரம் உட்பட 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் ,தற்போது இவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மூன்று பெண்கள் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தண்ணீர் லாரி – வேன் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்து காரணமாக அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.