வால்பாறை வனச்சரகர் கைதுக்கு எதிர்ப்பு… பொள்ளாச்சியில் வனத்துறை ஊழியர்கள் கண்டன பொதுக்கூட்டம்!

 

வால்பாறை வனச்சரகர் கைதுக்கு எதிர்ப்பு… பொள்ளாச்சியில் வனத்துறை ஊழியர்கள் கண்டன பொதுக்கூட்டம்!

கோவை

கைதுசெய்யப்பட்ட வால்பாறை வனச்சரகரை விடுதலை செய்யும் வரை காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என வனத்துறை ஊழியர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை சிருகுன்றா வனப்பகுதியில் உள்ள அரசு விருந்தினர் இல்லத்தில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகளை, வால்பாறை வனச்சரகர் ஜெயச்சந்திரன் தவறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், வால்பாறை போலீசார், வால்பாறை வனச்சரகர் ஜெயச்சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து, அவர் பொள்ளாச்சி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

வால்பாறை வனச்சரகர் கைதுக்கு எதிர்ப்பு… பொள்ளாச்சியில் வனத்துறை ஊழியர்கள் கண்டன பொதுக்கூட்டம்!

இந்த நிலையில், வனச்சரகர் பொய்யான வழக்கில் கைதுசெய்ததாக கூறி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை, உலாந்தி, பொள்ளாச்சி, மானம்பள்ளி, அமராவதி, உடுமலை ஆகிய வனச் சரகங்களில் பணிபுரியும் சுமார் 500-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் இன்று பொள்ளாச்சி வனச்சரக அலுவலகத்தில் தமிழ்நாடு நாடு வன அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் சிவபிரகாசம் தலைமையில் கண்டன கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாநில தலைவர் பேசுகையில், வனச்சரகர் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெற்று உடனடியாக அவரை விடுதலை செய்து, மீண்டும் அவரை அதே இடத்தில் பணியமர்த்த வேண்டும் என்றும், வனச்சரகர் மீது பொய்யான புகார் அளித்த வால்பாறை குற்றவியல் நீதிமன்ற ஊழியரை பணிநீக்கம் செய்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மேலும், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சொகுசு விடுதிகளுக்கு முறையின்றி யாரும் தங்க அனுமதிக்கக் கூடாது என்றும், வனத்துறை ஊழியர்கள் யாரையும் விடுதி பணிக்காக நியமிக்க கூடாது என்று கூறிய சிவபிரகாசம், அந்த பணிகளுக்கு தனியாக ஆட்களை நியமிக்க வேண்டும் என்றும் கூறினார்.

வால்பாறை வனச்சரகர் கைதுக்கு எதிர்ப்பு… பொள்ளாச்சியில் வனத்துறை ஊழியர்கள் கண்டன பொதுக்கூட்டம்!

அத்துடன், கைதான வால்பாறை வனச்சரகர் ஜெயச்சந்திரனை விடுதலை செய்யும் வரை, அனைத்து வனத்துறை ஊழியர்களும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக பொள்ளாச்சி வனச்சரக அலுவலகத்தில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.