வலிமை படத்தின் மாஸான மோஷன் போஸ்டர்!

 

வலிமை படத்தின் மாஸான மோஷன் போஸ்டர்!

நீண்டநாள் எதிர்பார்ப்பான நடிகர் அஜித் நடிப்பில் உருவாகும் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

வலிமை படத்தின் மாஸான மோஷன் போஸ்டர்!

நடிகர் அஜித் தற்போது நடித்துவரும் படம் வலிமை. இப்படத்தை எச்.வினோத் இயக்கிவரும் நிலையில், போனி கபூர் தயாரித்து வருகிறார். மேலும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.

வலிமை படத்தின் மாஸான மோஷன் போஸ்டர்!

வலிமை படத்தின் அப்டேட் நீண்ட நாட்களாக வெளிவராததால் , ரசிகர்கள் எங்கு பார்த்தாலும் அப்டேட் கேட்டு தொந்தரவு செய்துகொண்டிருந்த நிலையில், தல அஜித்தின் வலிமை படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கிற்கு பின் இன்று ஐதராபாத்தில் தொடங்கியது. அதற்காக ஒட்டுமித்த படக்குழுவினரும் ஐதராபாத்தில் முகாமிட்டுள்ளனர்.

இந்நிலையில் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதில் வலிமை படம் இந்த ஆண்டே வெளிவரும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தல அஜித் மாஸான ஸ்டைலில் கூலிங் கிளாஸ் உடன் கறுப்பு நிற டி ஷர்ட் அணிந்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சிறிது நேரத்திலேயே சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.