darbar
  • January
    21
    Tuesday

Main Area

Mainகாதலர் தின கொண்டாட்டம்; தயவு செய்து முரட்டு சிங்கிள்ஸ் படித்து விட்டு கான்டாக வேண்டாம்!!!

love
love

பிப்ரவரி மாதம் பிறந்ததுமே சட்டென்று நினைவுக்கு வருவது காதலர் தினம்தான். காதலிக்கு பரிசு வாங்கவும், காதலை வெளிப்படுத்தவும் ஏற்ற தருணமாக இளைஞர்கள் இதனை கருதுகின்றனர்.

காதலர் தினத்துக்கு பல்வேறு வரலாறுகள் கூறப்பட்டாலும், கி.பி. 3-ம் நூற்றாண்டில் ரோமப் பேரரசன் இரண்டாம் கிளாடியஸ் காலத்து வரலாறு தான் பிரதானம். திருமணத்துக்கு தடைவிதித்து பேரரசன் பிறப்பித்த ஆணையை மீறி காதலர்களை இணைத்து வைத்ததற்காக பாதிரியார் வாலண்டைனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நாள் தான் பிப்ரவரி 14.

love

மேற்குலக நாடுகளில் மட்டுமே கடைபிடிக்கப்பட்ட பிப்ரவரி 14- காதலர் தினம் என்பது இந்தியாவின் தாராளமயப் பொருளாதாரக் கதவுகள் திறக்கப்பட்ட காலத்தில் குடியேறிவிட்டது. ஆண்டுதோறும் பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் புத்தாண்டு கொண்டாட்டத்தைப் போல் இளைஞர் பட்டாளம் "ஆதலினால் காதல் செய்வீர்" என்று கொண்டாடி மகிழ்கின்றனர்.

ஆதாம்-ஏவாள் காலத்திலிருந்து இன்றைய இளசுகள் வரை காதலை சுமக்காத தலைமுறையே இருந்தது இல்லை. அப்படிப்பட்ட காதலை ஒருநாள் கொண்டாடினால் போதுமா? போதாது.. எனவே, காதலை அணு அணுவாக ரசித்து கொண்டாடுவதற்காக உருக்கப்பட்டதுதான் காதலர் தினக் காலண்டர். பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கி 14-ம் தேதி வரை ஒரு வாரம் காதலில் லயித்து போகலாம். அது எப்படி என பார்க்கலாம்..

பிப்ரவரி 7:

loverose

ரோஜா காதலின் அடையாளம். சிவப்பு ரோஜாக்கள் காதல் உணர்வை தூண்டும் என்பதால் இந்த தினத்தில் ரோஸ் டே கொண்டாடப்படுகிறது. 

பிப்ரவரி 8:

யாரெல்லாம் காதலைச் சொல்லக் காத்துக் கொண்டிருந்தீர்களோ அவர்களுக்குச் சரியான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் நாள். எனவே, காதலை சொல்லும் இந்த நாளில் உங்களது துணைக்கு பிடித்தமான இடத்துக்கு அழைத்துச் சென்று ரொமாண்டிக்காக காதலை சொல்லுங்கள்.

பிப்ரவரி 9:

காதல் உணர்வை அதிகரிகச் சொய்யும் ஹார்மோன்களை சாக்லெட்கள் தட்டி எழுப்பும். சாக்லெட் தினமான இந்த நாளில் சாக்லெட்களை கொடுத்து மகிழுங்கள். காதல் ஹார்மோன்கள் தூண்டப்பட்டு உங்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கலாம்.

பிப்ரவரி 10:

loveteddy

டெட்டி பியர் தினமான இன்று, பெண்களின் ஆல் டைம் ஃபேவரட் டெட்டி பியர் வாங்கிக் கொடுங்கள். உங்களை கொஞ்ச வெக்கப்படும் பெண்கள் டெட்டியை கொஞ்சுவார்கள்... 

பிப்ரவரி 11:

காதல் பொதுவாக நம்பிக்கையின் அடிப்படையில் தொடர்வது. நீங்கள் காதலில் எந்த அள்விற்கு உண்மையாக இருக்கிறீர்கள் என்பதை உணர்த்தும் சத்திய வாக்கு அளிக்கும் தினமாக இது கொண்டாடப்படுகிறது. உங்களது காதலை உறுதியாக்க சிறந்த நாள் இது.

பிப்ரவரி 12:

love

அடடே இது நம்ம டே...அதாங்க முத்த தினம்...முத்த தினம் என்றதும் பாய்ந்து விட வேண்டாம். முதலில் 'ஐ லவ் யூ' என நெற்றியில் முத்தமிடுவது நலம். பின்னர் உங்கள் அன்பை வெளிப்படுத்தி நீ கிடைக்க நான் அதிர்ஷ்டம் செய்துள்ளேன் என உங்களது மனதில் உள்ள காதல் ரசம் பொங்க பேசுங்கள். அதற்கு பிறகு எங்கு கொடுக்க வேண்டுமோ அங்கு கொடுத்துக் கொள்ளுங்கள்...

பிப்ரவரி 13:

love

இது கட்டியணைக்கும் தினமாம். கட்டிப்பிடி வைத்தியம் மூலம் அவர்களை பாதுகாப்பாக உணர செய்யுங்கள். உனக்காக நான் இருக்கிறேன் என்பதை ஆழமாக சொல்ல வேண்டும்.

பிப்ரவரி 14:

valentineday

கடைசி நாள் ஆனால் உங்கள் காதலுக்கு அல்ல. காதலர் தினத்தை கொண்டாட தயாராகுங்கள். உங்கள் இணைப்பை அர்த்தமானதாக மாற்றுங்கள். உங்களது இணையை மகிழ்ச்சியாக உணர செய்யுங்கள். காதலை கொண்டாடுங்கள்..."ஆதலினால் காதல் செய்வீர்" 

2018 TopTamilNews. All rights reserved.