ஒரு லட்சம் பணம், 4 லட்சம் கேமரா, வெள்ளி சிலை… வளசரவாக்கம் தயாரிப்பாளர் அலுவகத்தில் கைவரிசை காட்டிய கொள்ளை கும்பல்!

 

ஒரு லட்சம் பணம், 4 லட்சம் கேமரா, வெள்ளி சிலை… வளசரவாக்கம் தயாரிப்பாளர் அலுவகத்தில் கைவரிசை காட்டிய கொள்ளை கும்பல்!

வளசரவாக்கத்தைச் சேர்ந்த குகன் தெருவில் அலுவலம் ஒன்றை நடத்தி வருகிறார் தயாரிப்பாளர் சிவா. இவர் சென்னை வடபழனி பகுதியைச் சேர்ந்தவர்.

நேற்று சிவாவின் அலுவலத்திற்குச் சென்ற ஊழியர்கள் அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், உள்ளே சென்று பார்த்தபோது ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் நான்கு லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேமரா மேலும் ஒரு வெள்ளி சாமி சிலை ஆகியவை அடையாளம் தெரியாதவர்களால் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

ஒரு லட்சம் பணம், 4 லட்சம் கேமரா, வெள்ளி சிலை… வளசரவாக்கம் தயாரிப்பாளர் அலுவகத்தில் கைவரிசை காட்டிய கொள்ளை கும்பல்!
பின்னர், கொள்ளை சம்பவம் குறித்து வளசரவாக்கம் காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போரூர் உதவி ஆணையர் மகிமை வீரன் மற்றும் ஆய்வாளர் அமுதா அலுவலத்தை சோதனை செய்தனர். மேலும் அங்கிருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.