“சசிகலாவை விமர்சித்ததால் வளர்மதி ஆவேசம்! கலைஞர், ஸ்டாலின் மனைவி பற்றி பேசட்டுமா?”

 

“சசிகலாவை விமர்சித்ததால் வளர்மதி ஆவேசம்! கலைஞர், ஸ்டாலின் மனைவி பற்றி பேசட்டுமா?”

எம்.ஜி.ஆரின் 104வது பிறந்த நாளையொட்டி கே.கே.நகர் சிவன் பார்க் எதிரில் உள்ள பொப்பிளி ராஜா சாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
மற்றும் முன்னாள் அமைச்சர், அமைப்பு செயலாளர், இலக்கிய அணி செயலாளர், பாட நூல்கழக தலைவர் பா.வளர்மதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் வளர்மதி, “ஒருத்தன் சொல்கிறான் நான் எம்.ஜி.ஆர். மடியில் தவழ்ந்தேன் என்று… நான் கூடத்தான் எம்.ஜி.ஆர் மடியில் தவழ்ந்தேன், எனக்கு வளர்மதி என பெயர் வைத்தவர் எம்.ஜி.ஆர்.தான். எனக்கு பெயர் வைத்துவிட்டு எனக்கு எம்.ஜி.ஆர் 10 ரூபாய் கொடுத்தார். எம்.ஜி.ஆர். மடியில் தவழ்ந்தேன் என்பதற்காக நானும் தனிக்கட்சி ஆரம்பிக்க முடியுமா? கேட்பவன் கட்டையால் அடிக்க மாட்டானா? எம்.ஜி.ஆர் பெயரை பயன்படுத்தி சிலர் சொந்தம் கொண்டாட நினைக்கிறார்கள். திமுகவினர் போடும் கூட்டத்தில் ஸ்டாலினை நோக்கி 3 பேன்களை சுற்ற வைக்க முடியுமா? அங்கு ஸ்டாலின் உட்கார மாட்டார், ஏனென்றால் ஸ்டாலின் விக் வைத்துக் கொண்டு பிரச்சாரம் செய்கிறார். நாள் தோறும் டிசைன் டிசைனாக ஸ்டைலாக விக் வைத்துக் கொண்டு உலா வருகிறார்.

“சசிகலாவை விமர்சித்ததால் வளர்மதி ஆவேசம்! கலைஞர், ஸ்டாலின் மனைவி பற்றி பேசட்டுமா?”

234 தொகுதிகளிலும் திமுக வெற்றிப்பெறும் என ஸ்டாலின் சொல்கிறார். 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி எனில் காங்கிரஸை ஏன் கூட்டணியில் வைத்து இருக்கிறீர்கள். சசிகலா குறித்து வயதுக்கு மீறிய வார்த்தைகளை உதயநிதி பேசி வருகிறார். நாங்கள் ஸ்டாலின் மனைவி பற்றியும், உதயநிதி மனைவி பற்றியும் ஸ்டாலினின் சின்னம்மா ராசாத்தி பற்றியும் நாங்கள் பேசட்டுமா? நடிகை சிலோன் லைலா எழும்பூரில் உள்ள லாட்ஜில் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டார்; அந்த கொலைக்கு காரணம் மு.க.ஸ்டாலின். எங்களுக்கும் அசிங்கமாக பேசத்தெரியும். ஆனால் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் எங்களை அப்படி வளர்க்கவில்லை” எனக் கூறினார்.