ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தங்க மகன் நீரஜுக்கு… கவிஞர் வைரமுத்து வாழ்த்து!

 

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தங்க மகன் நீரஜுக்கு… கவிஞர் வைரமுத்து வாழ்த்து!

இந்திய தேசியக் கோடியை ஒலிம்பிக்கில் உயர்த்தி பிடித்த நீரஜ் சோப்ராவுக்கு கவிஞர் வைரமுத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதி சுற்றில் 87.58 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி வீசி இந்தியாவுக்கான முதல் தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்தார் நீரஜ் சோப்ரா. ஈட்டி எறிதலிலுக்கான முதல் சுற்றில் நீரஜ் சோப்ரா 87.03 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்தார். இறுதி வரையில் அந்த தூரத்தை கூட யாராலும் எட்ட முடியவில்லை. அந்த அளவுக்கு மிக கடுமையாக போராடி தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார்.

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தங்க மகன் நீரஜுக்கு… கவிஞர் வைரமுத்து வாழ்த்து!

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு தடகள போட்டியில் இந்தியர் ஒருவர் தங்கம் வெல்வது இதுவே முதல் முறை. தனிநபர் பிரிவில் இந்தியா ஒலிம்பிக்கில் தனது இரண்டாவது பதக்கத்தை வென்றுள்ளது. நீரஜ் சோப்ராவின் இந்த வரலாற்று சாதனையை இந்தியர்கள் கொண்டாடி வருகிறார்கள். 6 கோடி ரூபாய் பரிசுத்தொகை, கிரேட் 1ல் அரசு வேலை, இலவசமாக பயணிக்க கோல்டன் பாஸ் என பரிசு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார் நீரஜ் சோப்ரா.

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தங்க மகன் நீரஜுக்கு… கவிஞர் வைரமுத்து வாழ்த்து!

இந்த நிலையில், இந்தியாவுக்கு பதக்கத்தை வென்று கொடுத்த நீரஜ் சோப்ராவுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கோலாரில் தோண்டியெடுக்கப்பட்ட மொத்தத் தங்கத்திற்கும் மேலானது இந்த ஒற்றை ஒலிம்பிக் தங்கம். இந்திய தேசியக்கொடியை ஒலிம்பிக்கில் உயர்த்திப்பிடித்த நீரஜ்! உங்களுக்கு எங்கள் வீர வாழ்த்து என்று குறிப்பிட்டுள்ளார்.