‘பட்டாசுகள் மனிதர்களை வெடிப்பது துயரமானது’ – வைரமுத்துவின் உருக்கமான பதிவு!

‘பட்டாசுகள் மனிதர்களை வெடிப்பது துயரமானது’ – வைரமுத்துவின் உருக்கமான பதிவு!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இயங்கி வந்த தனியார் பட்டாசு ஆலையில் நேற்று திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில், 19 பேர் உயிரிழந்தனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் சிலர் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதால் உயிரிழப்புகள் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வெடி விபத்து மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

‘பட்டாசுகள் மனிதர்களை வெடிப்பது துயரமானது’ – வைரமுத்துவின் உருக்கமான பதிவு!

இதைத் தொடர்ந்து, இன்று காலை விருதுநகர் அருகே காக்கிவாடன்பட்டியில் மீண்டும் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. நாட்டு வெடிகள் வெடித்து சிதறிக் கொண்டிருந்ததால் தீயணைப்பு பணியில் தொய்வு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது. விருதுநகரில் அடுத்தடுத்து வெடி விபத்து ஏற்படுவது பதைபதைக்கச் செய்தது. வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் ரூ.3 லட்சம் நிவாரணமும், பிரதமர் ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்திருக்கிறார்.

‘பட்டாசுகள் மனிதர்களை வெடிப்பது துயரமானது’ – வைரமுத்துவின் உருக்கமான பதிவு!

இந்த நிலையில், விருதுநகர் வெடி விபத்து குறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மனிதர்கள் பட்டாசுகளை வெடிப்பதுபோய் – பட்டாசுகள் மனிதர்களை வெடிப்பது துயரமானது. அதனினும் பெருந்துயரம் மனித உயிர்களின் விலை சில லட்சங்கள் ஆகிப்போவது” என்று குறிப்பிட்டுள்ளார்.