இந்தியில் முகவரி எழுதினால் தான் அஞ்சல் சென்று சேருமா? : வைரமுத்து கண்டனம்!

 

இந்தியில் முகவரி எழுதினால் தான் அஞ்சல் சென்று சேருமா? : வைரமுத்து கண்டனம்!

அஞ்சல் துறையில் கணக்கர் பதவிக்கான காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோம், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மட்டுமே தேர்வெழுத முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, தமிழர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இதற்கு கண்டனம் தெரிவித்து வெளியிட்டிருந்த அறிக்கையில், ‘தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் தேர்வு நடத்தப்பட வேண்டும். அதற்கான அறிவிப்பு வெளியாகும் வரை தேர்வை நடத்தக் கூடாது’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தியில் முகவரி எழுதினால் தான் அஞ்சல் சென்று சேருமா? : வைரமுத்து கண்டனம்!

இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், எந்த இடத்திலும் இந்தி திணிக்கப்படாது என்ற உறுதி மொழியை மத்திய அரசு கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அஞ்சல் துறையில் இந்தி திணிப்புக்கு கண்டனம் தெரிவித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், “அஞ்சல்துறைத் தேர்வுக்குத் தமிழில் தயாராகிக் கொண்டிருந்த ஒரு தலைமுறையின் தலையில் இடி விழுந்திருக்கிறது. ஆங்கிலத்திலும் இந்தியிலும் தான் தேர்வெழுத வேண்டுமா? இனி ஆங்கிலத்திலும் இந்தியிலும் முகவரி எழுதினால் தான் அஞ்சல் சென்று சேருமா?” என்று குறிப்பிட்டுள்ளார்.