“காதல் வந்தால் சொல்லி அனுப்பு; பெட்ரோல் இருந்தால் வருகிறேன்” : கவிஞர் வைரமுத்து ட்வீட்!

 

“காதல் வந்தால் சொல்லி அனுப்பு; பெட்ரோல் இருந்தால் வருகிறேன்” : கவிஞர் வைரமுத்து ட்வீட்!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை குறித்துதான் எழுதிய பாடல் வரியை வைத்து கவிஞர் வைரமுத்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

சர்வதேச கச்சா எண்ணெய் சந்தை நிலவரப்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை இந்தியாவில் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உச்சத்தை எட்டியுள்ளது. பெட்ரோல் விலை லிட்டர் 70 ரூபாய் இருந்த நிலையில் தற்போது லிட்டர் பெட்ரோல் 90ஐ தாண்டியுள்ளது.

“காதல் வந்தால் சொல்லி அனுப்பு; பெட்ரோல் இருந்தால் வருகிறேன்” : கவிஞர் வைரமுத்து ட்வீட்!

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 23 காசுகள் அதிகரித்து ரூ.91.68-க்கு விற்பனையாகிறது. டீசல் விலை லிட்டருக்கு 24 காசுகள் அதிகரித்து ரூ.85.01-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் கடலூரில் பெட்ரோல் லிட்டர் ரூ.93.40-க்கும், டீசல் ரூ.86.66-க்கும் விற்பனையாகிறது.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், “என் பாட்டு வரியை மாற்றி எனக்கே அனுப்புகிறார்கள் : ‘காதல் வந்தால் சொல்லி அனுப்பு;பெட்ரோல் இருந்தால் வருகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.இதை கண்ட நெட்டிசன்கள் வைரமுத்துவின் பாடல் வரிகளை வைத்து மேலும் பல வரிகளை பதிவிட்டு வருகிறார்கள்.