ஸ்டாலினின் கோரிக்கைகளை நிறைவேற்றுக! பிரதமருக்கு வைரமுத்து வேண்டுகோள்

 

ஸ்டாலினின் கோரிக்கைகளை நிறைவேற்றுக! பிரதமருக்கு வைரமுத்து வேண்டுகோள்

முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக டெல்லி சென்ற மு.க.ஸ்டாலின், இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். 25 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பின்போது, தமிழக நலன் சார்ந்த 30க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

ஸ்டாலினின் கோரிக்கைகளை நிறைவேற்றுக! பிரதமருக்கு வைரமுத்து வேண்டுகோள்

திருக்குறளை தேசிய நூலக அறிவிக்க வேண்டும், சென்னை ஐகோர்ட்டின் வழக்காடு மொழியாக தமிழ் மொழியை அங்கீகரிக்க வேண்டும், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தமிழக அரசு சார்பில் முன்வைக்கப்பட்டன. தமிழ்நாட்டின் கோரிக்கைகளை மத்திய அமைச்சர்களோடு கலந்துபேசி நிறைவேற்றுவதாக முதல்வர் ஸ்டாலினிடம் பிரதமர் மோடி உறுதியளித்தார்.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், “நீட் தேர்வு கல்விக் கோரிக்கை, திருக்குறள் தேசியநூலக கலாசாரக் கோரிக்கை, தடுப்பூசி உயிர்க் கோரிக்கை, வேளாண் சட்டங்கள் உழவர் கோரிக்கை, ஜி. எஸ். டி பொருளாதாரக் கோரிக்கை, முன்வைத்தமைக்கு நன்றி முதலமைச்சர் அவர்களே!, கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்து பெருமைப் படுத்துங்கள் பிரதமர் அவர்களே!” எனக் குறிப்பிட்டுள்ளார்.