“ஆசிரியர் குலத்திற்கு என் கனிந்த கைகூப்பு”.. கவிஞர் வைரமுத்து ட்வீட்!

 

“ஆசிரியர் குலத்திற்கு என் கனிந்த கைகூப்பு”.. கவிஞர் வைரமுத்து ட்வீட்!

ஆசிரியர்கள் தினத்தை ஒட்டி கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாள், ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வழக்கமாக விமர்சையாக நடத்தப்படும் ஆசிரியர்கள் தின விழா, இந்த ஆண்டு கொரோனா பாதிப்பின் காரணமாக எளிமையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் மத்திய, மாநில் அரசுகள் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை நல்லாசிரியர் விருதுக்கு 375 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

“ஆசிரியர் குலத்திற்கு என் கனிந்த கைகூப்பு”.. கவிஞர் வைரமுத்து ட்வீட்!

நாளை மறுநாள் மாவட்ட வாரியாக நடத்தப்பட உள்ள விழாவில், தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன. மாநில அரசும் நடத்தும் விழா ரத்து செய்யப்பட்டதால் மாவட்ட வாரியாக விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. இன்று ஆசிரியர்கள் தினத்தை ஒட்டி முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

“ஆசிரியர் குலத்திற்கு என் கனிந்த கைகூப்பு”.. கவிஞர் வைரமுத்து ட்வீட்!

அந்த வகையில் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஆசிரியர்களுக்காக கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “கல்லூரிப் பேராசிரியர்கள் எனக்கு உரமிட்டவர்கள்; பள்ளி ஆசிரியர்களே நட்டவர்கள். காலச்சக்கரம் பின்னோக்கிச் சுழன்றால் பள்ளி நாட்களுக்கே பயணப்படுவேன். அவர்களைப் பார்த்துப் பேராசிரியனாகவே ஆசைப்பட்டேன்; காலம் என்னைப் பாடலாசிரியனாக்கிற்று. ஆசிரியர் குலத்திற்கு என் கனிந்த கைகூப்பு.” என குறிப்பிட்டுள்ளார்.