“எழுபது என்பது முதுமையின் இளமை” – ரஜினிகாந்துக்கு வைரமுத்து வாழ்த்து!

 

“எழுபது என்பது முதுமையின் இளமை” – ரஜினிகாந்துக்கு வைரமுத்து வாழ்த்து!

நடிகர் ரஜினிகாந்துக்கு கவிஞர் வைரமுத்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

நூற்றுக் கணக்கான திரைப்படங்களின் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 70ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஜனவரி மாதம் அவர் கட்சி தொடங்கவிருப்பது அவரது ரசிகர்களை பெரும் மகிழ்ச்சி அடையச் செய்திருக்கிறது. இன்று அவரது பிறந்தநாளையொட்டி, சென்னை போயஸ் கார்டன் இல்லத்தின் வாயிலில் கூடிய ரசிகர்கள் கேக் வெட்டியும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

“எழுபது என்பது முதுமையின் இளமை” – ரஜினிகாந்துக்கு வைரமுத்து வாழ்த்து!

அதுமட்டுமில்லாமல் ரஜினிக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்த அண்ணாமலை, எந்திரன், முத்து, பாட்ஷா உள்ளிட்ட கதாபாத்திரங்களின் கெட் அப் போட்டும் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். இதனிடையே நடிகர் ரஜினிகாந்துக்கு முதல்வர் ஈபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ், மு.க ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

“எழுபது என்பது முதுமையின் இளமை” – ரஜினிகாந்துக்கு வைரமுத்து வாழ்த்து!

அந்த வகையில் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “கலை உலகில் என் அணுக்கமான நண்பர்கள் சிலருள் நெருக்கமான ஒருவர் ரஜினிகாந்த். எழுபதைத் தொடுகிறார். எழுபது என்பது முதுமையின் இளமை அல்லது இளமையின் பெருமை. உடல் நலத்தோடும் மன வளத்தோடும் பல்லாண்டு வாழத் தொலைபேசியில் வாழ்த்தினேன். மகிழ்ச்சி; எனக்கும் அவருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.