Home தமிழகம் "தென் மாவட்டங்களின் குடிநீர் பிரச்சினையை உடனே தீருங்கள்" - அமைச்சர் கேஎன் நேருவுக்கு வைகோ அவசர கடிதம்!

“தென் மாவட்டங்களின் குடிநீர் பிரச்சினையை உடனே தீருங்கள்” – அமைச்சர் கேஎன் நேருவுக்கு வைகோ அவசர கடிதம்!

தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ள பல கிராமங்களில் குடிநீர் பிரச்சினையைத் தீர்த்துவைக்க சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் கே.என்.நேருவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார்.

"தென் மாவட்டங்களின் குடிநீர் பிரச்சினையை உடனே தீருங்கள்" - அமைச்சர் கேஎன் நேருவுக்கு வைகோ அவசர கடிதம்!
"தென் மாவட்டங்களின் குடிநீர் பிரச்சினையை உடனே தீருங்கள்" - அமைச்சர் கேஎன் நேருவுக்கு வைகோ அவசர கடிதம்!

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில், புளியங்குடி நகராட்சிகள், திருவேங்கடம் பேரூராட்சி மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம், சிவகாசி, திருத்தங்கல் ஆகிய நகராட்சிப் பகுதிகளுக்கு தாமிரபரணி ஆற்றிலிருந்து கூடுதலாக குடிநீர் வழங்க வழிவகை செய்யும் “சங்கரன்கோவில் கூட்டுக் குடிநீர் அபிவிருத்தித் திட்டம் பகுதி -1” எனும் திட்டத்திற்கு, தமிழக அரசால் 30.01.2017இல் நிர்வாக உத்தரவு வழங்கப்பட்டு, 06.12.2017 முதல் வேலைகள் நடந்து வருகின்றன.

உலக வங்கி, தமிழ்நாடு நகர கட்டமைப்பு மேம்பாட்டு மையம் மற்றும் அம்ரூட் (AMRUT) திட்டத்தின் கீழ் ரூபாய் 543 கோடி நிதி உதவியுடன் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட ஐந்து நகராட்சிகள் மற்றும் ஒரு பேரூராட்சியைச் சேர்ந்த 1,14,045 குடியிருப்புகளில் வசிக்கும் 4,35,150 பேருக்குக் குடிநீர் வழங்குவதை இலக்காகக் கொண்ட இத்திட்டப் பணிகள் நிறைவுபெறும்போது அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு கிடைக்கப் பெறும் என்பது இத்திட்டத்தின் இலக்கு ஆகும்.

இந்துத்துத்துவா நெருக்குதலுக்கு அஞ்சுகிறாரா வைகோ? | nakkheeran

இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் குடிநீர் பற்றாக்குறை குறித்த தங்களின் குமுறல்களை நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது வேட்பாளர்களிடம் காட்டியதை அறிய முடிந்தது. குடிநீர் தட்டுப்பாடு நிலவும் இப்பகுதியில், திட்டப் பணிகளைக் குறிப்பிட்ட கால அளவு நிர்ணயித்து விரைந்து முடிக்க, குடிநீர் வடிகால் வாரியத்திற்குத் தக்க உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும், இத்திட்டத்தில் பயன்பெறும் திருவேங்கடம் பேரூராட்சிக்கு உட்பட்ட செல்லபட்டி, கீழத் திருவேங்கடம், புதுப்பட்டி, ஆவுடையார்புரம் ஆகிய நான்கு கிராமங்களுக்கும் புதிய குடிநீர்க் குழாய்கள் அமைத்து, இத்திட்டத்தில் கிடைக்கப் பெறும் தண்ணீரை வழங்கிடவும் வேண்டுகிறேன்.

People of Golaghat facing drinking water problem - Sentinelassam

அதேபோல், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நான் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டபோது, தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலம் பயன்பெறும் பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக என் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். அம்மக்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்து உதவிடுமாறும் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

"தென் மாவட்டங்களின் குடிநீர் பிரச்சினையை உடனே தீருங்கள்" - அமைச்சர் கேஎன் நேருவுக்கு வைகோ அவசர கடிதம்!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

“சென்னையிலிருந்து கடலூர், நாகைக்கு பயணிகள் கப்பல்”

சென்னை -புதுச்சேரி- காரைக்கால் இடையே விரைவில் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இது...

தமிழகத்துக்கான 4,81,310 கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று சென்னை வருகிறது!

தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 1,830பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25லட்சத்து 44 ஆயிரத்து 870ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் நேற்று ஒரேநாளில் 24 பேர்...

காப்பி அடித்தபோது சிக்கியதால் கல்லூரியில் 3வது மாடியில் இருந்து குதித்து மருத்துவ மாணவி தற்கொலை

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சவீதா மருத்துவக் கல்லூரியில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து மருத்துவ மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கல்லூரி மாணவர்களை உலுக்கி எடுத்திருக்கிறது.

“ஜெயலலிதா பல்கலைக்கழகம் தேவையற்ற ஒன்று”: அமைச்சர் பொன்முடி திட்டவட்டம்!

ஜெயலலிதா பல்கலைக்கழகம் தேவையற்ற ஒன்று என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,...
- Advertisment -
TopTamilNews