6 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டது ஏன்? வைகோ விளக்கம்

 

6 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டது ஏன்? வைகோ விளக்கம்

திமுக தலைமையிலான கூட்டணியில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து மதிமுக பொதுச்செயலாளர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய வைகோ, “சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 6 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மதிமுக சம்மதம். சனாதன இந்துத்துவ சக்திகளை தடுத்து நிறுத்துவதற்கு திமுகவுக்கு முழு ஆதரவை தருவோம். கருணாநிதி உடல்நலக்குறைவால் இருந்தபோது உங்களுக்கு எப்படி பக்க பலமாக இருந்தனோ அதேபோன்று ஸ்டாலினுக்கு பக்கபலமாக இருப்பேன் என கருணாநிதியிடம் உறுதியளித்திருந்தேன். அந்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவேன், திராவிட இயக்கத்தை பாதுகாக்க திமுகவுடன் தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திட்டோம். சட்டமன்ற தேர்தலில் முதன்முதலாக திமுகவோடு கைக்கோர்த்து இருப்பது மிக்க மகிழ்ச்சி. மிகச்சிறந்த முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின் மட்டும்” என தெரிவித்தார்.

6 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டது ஏன்? வைகோ விளக்கம்

திமுக-மதிமுக இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்துவந்த நிலையில் ஆறு தொகுதிகளுக்கு மதிமுக தரப்பு உடன்பட்டிருக்கிறது. சற்றுமுன் ஸ்டாலின், வைகோ இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. காங்கிரஸ் உடனான பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியிலேயே சென்றுகொண்டிருக்கிறது.