திமுக சின்னத்தில் போட்டியிடும் மதிமுக? – வைகோ சூசகம்

 

திமுக சின்னத்தில் போட்டியிடும் மதிமுக? – வைகோ சூசகம்

தமிழக தேர்தலை முன்னிட்டு இருபெரும் கட்சிகளான திமுகவும் அதிமுகவும் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்திவருகின்றன. இருதரப்பிலுமே இறுதிமுடிவு எட்டப்படாமல் தொடர்ந்து இழுபறியாகவே சென்றுகொண்டிருக்கிறது. பாமகவுக்கு 23 இடங்கள் என அதிமுக அறிவித்திருந்த நிலையில், நேற்று தான் திமுக முஸ்லீம் லீக் கட்சியுடனும், மனிதநேய மக்கள் கட்சியுடனும் உடன்படிக்கை மேற்கொண்டது. அதேசமயம் விசிக, மதிமுகவுடனும் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது.

திமுக சின்னத்தில் போட்டியிடும் மதிமுக? – வைகோ சூசகம்

பேச்சுவார்த்தையில் திமுக சின்னத்தில் 7 தொகுதிகளில் போட்டியிட மதிமுக வலியுறுத்தப்பட்டதாகவும், அதற்கு மதிமுக தரப்பு சம்மதிக்கவில்லை எனவும் தகவல் வெளியானது. பேச்சுவார்த்தை முடிந்து வெளியில் வந்த மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும் என்று கூறியிருந்தார். அதேபோல திருமாவளவனும் எந்த சின்னம், எத்தனை தொகுதிகள் என அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் ஆலோசனை செய்யப்படும் என்று தெரிவித்தார்.

திமுக சின்னத்தில் போட்டியிடும் மதிமுக? – வைகோ சூசகம்

மதிமுகவுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், இன்று மதிமுக அலுவலகத்தில் வைகோவை திமுகவின் முக்கிய நிர்வாகிகள் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். கேகேஎஸ்எஸ்ஆர், தங்கம் தென்னரசு, ஏஆர்ஆர் சீனிவாசன், ராஜா அருள்மொழி ஆகியோர் பேச்சுவார்த்தைக்குச் சென்றிருந்தனர். இப்பேச்சுவார்த்தையில் திமுக சின்னத்தில் போட்டியிட திமுக தரப்பு வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

திமுக சின்னத்தில் போட்டியிடும் மதிமுக? – வைகோ சூசகம்

ஏற்கெனவே வைகோ தனது ஆதரவாளர்களிடம் மதிமுக தற்போது இக்கட்டான சூழலில் இருக்கிறது; சிலர் சொல்வதைக் கேட்டாக வேண்டிய சூழல் இருக்கிறது என உருக்கமாகப் பேசியிருந்தார். இதனால் பேச்சுவார்த்தையில் அவர் திமுக சின்னத்தில் போட்டியிட ஒப்புக்கொண்டதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியாகியிருக்கிறது. தற்போதைய வைகோவின் பேட்டியும் இதையொட்டியே அமைந்திருக்கிறது.

திமுக சின்னத்தில் போட்டியிடும் மதிமுக? – வைகோ சூசகம்

பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, “தற்போது முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்துமுடிந்திருக்கிறது. அடுத்தக்கட்ட தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை திமுகவிடமிருந்து அழைப்பு வரும்போது செல்வோம். எந்த சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுவோம் என இப்போதைக்குக் கூற முடியாது” என சூசகமாகத் தெரிவித்துள்ளார்.