திமுக பிடியில் வைகோ : தனித்துவத்தை இழந்தது ஏன் ?

 

திமுக பிடியில் வைகோ :  தனித்துவத்தை இழந்தது ஏன் ?

மதிமுக 6 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது ஏன் என வைகோ விளக்கம் அளித்துள்ளார்.

திமுக பிடியில் வைகோ :  தனித்துவத்தை இழந்தது ஏன் ?

திமுகவில் இருந்து பிரிந்த வைகோ அதிமுக என்ற கட்சியை 1994ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை செயல்படுத்தி வருகிறார்.1996இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்த வைகோ 177 தொகுதிகளில் போட்டியிட்டார். ஆனால் அதில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.2006ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் இணைந்த வைகோ 35 தொகுதிகளில் போட்டியிட்டார். அதில் 6 இடங்களை அவருக்கு கிடைத்தது.2011 ஆம் ஆண்டு அதிமுக உடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டதால் அந்த கூட்டணியை புறக்கணித்தார் .பிறகு 2016 ஆம் ஆண்டு மக்கள் நல கூட்டணி என்ற பெயரில் விஜயகாந்த் ,திருமாவளவன் உள்ளிட்டோர் உடன் கூட்டணி அமைத்த அவர் 29 தொகுதிகளில் போட்டியிட்டார் . ஆனால் அதிலும் வெற்றி பெறவில்லை.கருணாநிதி மறைவுக்கு பிறகு திமுகவுடன் ஐக்கியமான வைகோ முதல் முறையாக திமுகவுடன் இணைந்து சட்டசபை தேர்தலை எதிர் கொள்கிறார்.உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடலாம் என்ற திமுக கோரிக்கையை ஏற்காத வைகோ தனி சின்னத்தில் தான் போட்டி என்று கூறிவந்தார்.தனி சின்னத்தில் போட்டியிடும் போது தான் தங்களுக்கான வாக்கு சதவீதம் என்ன என்பது தெரிய வரும் என்பதில் தீர்க்கமாக இருந்தார் வைகோ.

திமுக பிடியில் வைகோ :  தனித்துவத்தை இழந்தது ஏன் ?

இந்நிலையில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் வைகோ போட்டியிடுகிறார். இதுகுறித்து கூறியுள்ள வைகோ, “ஒரு கட்சிக்கு 12 தொகுதிகளுக்கு குறையாமல் அளிக்கும்போது தான் அவர்கள் ஒரே சின்னத்தில் எல்லா இடங்களிலும் போட்டியிட முடியும். 5 சதவீத அடிப்படையில் இல்லாமல் 12 தொகுதிகளுக்கு குறைவான இடங்களில் போட்டியிடும் போது வெவ்வேறு சின்னத்தில் தான் போட்டியிடும் நிலைமை ஏற்படும். அதை தவிர்க்கவும், 12 நாட்கள் மட்டுமே பிரச்சாரத்திற்கு உள்ளதால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் முடிவுக்கு மதிமுக வந்துள்ளது ” என்றார்