முருகனின் அவதார நாள் – வைகாசி விசாகத்தின் சிறப்புகள்

 

முருகனின் அவதார நாள் – வைகாசி விசாகத்தின் சிறப்புகள்

முருகப் பெருமான் விசாக நட்சத்திரத்தில் பிறந்த காரணத்தால் விசாகன் எனவும் அழைக்கப்படுகிறார். வருகிற ஜூன் 4-ஆம் தேதி வைகாசி விசாக நாள் ஆகும்.

வைகாசி விசாகம் என்பது முருகப் பெருமானின் அவதார நாளாக கொண்டாடப்படுகிறது. மேலும் எமதர்மனின் அவதார தினமாகவும் இது கருதப்படுகிறது. வைகாசி விசாக நாளில் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் நோய் நொடியின்றி நீண்ட நாள் வாழ்வதற்கான அருள் கிடைப்பதாக என்று கூறப்படுகிறது.

முருகனின் அவதார நாள் – வைகாசி விசாகத்தின் சிறப்புகள்

வசந்தகாலத்தின் பிற்பகுதியில் வைகாசி மாதம் வருவதால் வைகாசி விசாக நாளில் கோவில்களில் வசந்தோற்சவ விழாக்கள் நடத்தப்படுகின்றன. வைகாசி விசாக நாளில் பல முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அர்ஜுனன் பாசுபத ஆயுத்தை சிவபெருமானிடம் இருந்து பெற்ற தினம் வைகாசி விசாக நாளாகும். பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வாரும் வைகாசி விசாக நாளில் தான் பிறந்தார்.

முருகனின் அவதார நாள் – வைகாசி விசாகத்தின் சிறப்புகள்

வைகாசி விசாக நாளின்போது நிறைய கோவில்களில் மகா உற்சவம் நடத்தப்படுகிறது. வைகாசி விசாக நாளில் பிறப்பவர்கள் அறிவில் சிறந்தவர்களாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. சிறப்பு வாய்ந்த வைகாசி விசாக நாளில் விரதம் இருந்தால் வாழ்வில் உயர்ந்த நிலையை அடையலாம். பொதுவாக வைகாசி விசாக நாளில் திருச்செந்தூரில் கருவறையில் தண்ணீர் தேங்கியிருக்கும்படி செய்து கடவுளுக்கு சிறு பருப்புப் பாயாசம், நீர்மோர், அப்பம் ஆகியவற்றை படைத்து வெப்பம் தணிக்கும் விழாவான உஷ்ணசாந்தி உற்சவம் நடத்தப்படுகிறது.