Home தமிழகம் கமல்ஹாசன் ஒரு கோழை - வைகைச் செல்வன் விளாசல்

கமல்ஹாசன் ஒரு கோழை – வைகைச் செல்வன் விளாசல்

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பாக காஞ்சிபுரம் காந்தி சாலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பின்செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன், “கமல்ஹாசன் ஒரு கோழை போல் பேசுகிறார். நாட்டுப் பற்று இல்லாத கமல்ஹாசனின் பேச்சை நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கமலஹாசன் கூறியது அப்பட்டமான பொய். விஸ்வரூபம் திரைப்படத்திற்கு ஜெயலலிதா அவர்கள் இருக்கும் போது எவ்வளவு உதவிகளை செய்தார்கள். இருப்பினும் அப்போது கமலஹாசன் நாட்டைவிட்டு போய்விடுவதாக ஒரு கோழையைப் போல் பேசினார். ஓர் உண்மையான குடிமகன் தன் நாட்டை நேசிக்கிறவன் இறையாண்மையை நேசிக்கிறவன் இதுவரை தமிழக மண்ணில் எத்தனையோ திரைப்படங்களில் வெற்றிவாகை சூடியவர் என்கின்ற வகையில் தமிழக மக்கள் ஆதரவு தந்து இருக்கும் பொழுது விஸ்வரூபம் என்கின்ற ஒரு படத்திற்காக பொய்யான கருத்தை முன்வைத்து உடனடியாக இந்த நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று கூறினார். நாட்டுப் பற்று இல்லாத கமல்ஹாசனின் பேச்சை நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்

துக்ளக் விழாவில் குருமூர்த்தி நீதிபதிகளை பற்றி கூறிய கருத்து மிகவும் தவறானது. நீதிபதிகளை எந்த ஒரு இடத்திலும் நம் குறை கூறக்கூடாது அவர்கள் எல்லோருக்கும் பொதுவானவர்கள். சட்டத்தின் அமைப்பின் அடிப்படையிலேயே அவர்கள் தங்களின் தீர்ப்புகளை வழங்கி வருகிறார்கள். திமுகவை வீழ்த்த அதிமுக ஒன்றே போதும். அதிமுக பலம் மிகுந்த இயக்கம். ஏற்கனவே நான்குநேரி விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் மகத்தான வெற்றி பெற்றிருக்கிறோம்” என தெரிவித்தார்

மாவட்ட செய்திகள்

Most Popular

234 இடங்களில், 17 இடங்களை காலி செய்த திமுக!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் மதிமுக, விசிக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தைகளை நடந்து முடிந்து விட்டது. திமுக - மார்க்சிஸ்ட் இடையே...

ஓபிஎஸ் -ஈபிஎஸ் அறிவிப்பு : கடும் அதிருப்தியில் ஜான் பாண்டியன்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தனித்தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ. தேனிமொழி, மீண்டும் போட்டியிட அதிமுகவில் விருப்பமனு கொடுத்திருக்கிறார். அவருடன் 20க்கும் மேற்பட்ட அதிமுகவினர் விருப்ப மனு கொடுத்திருந்தாலும், ‘’50 ஆயிரம் வாக்குகள்...

அதிமுகவுடன் தொகுதி இழுபறி… தமிழகத்திற்கு கிளம்பிவரும் அமித்ஷா

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருப்பதால் அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பிரதான கட்சிகளான திமுக, அதிமுக தொகுதி பங்கீட்டில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. 3ஆவது அணியாக...

ஸ்டாலின் சொன்ன சமாதானம்; ஏற்க மறுக்கும் உதயநிதி

உதயநிதிஸ்டாலினுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டதற்கே வாரிசு அரசியல் என்ற விமர்சனம் கடுமையாக எழுந்திருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி மட்டுமல்லாது பிரதமர் மோடியும், அமித்ஷாவும் கூட திமுகவின் வாரிசு அரசியலை சாடி...
TopTamilNews