5-வது முறையாக முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை… மகிழ்ச்சியில் 5 மாவட்ட மக்கள்…

 

5-வது முறையாக முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை… மகிழ்ச்சியில் 5 மாவட்ட மக்கள்…

தேனி

வைகை அணை தனது வரலாற்றில் 5-வது முறையாக இன்று முழு கொள்ளளவான 71 அடியை எட்டியுள்ளது. இதனால், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது. 71 அடி உயரம் கொண்ட இந்த அணையில், நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக பெய்த தொடர் மழையின் காரணமாக நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வந்தது. வழக்கமாக அணையில் 69 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கப்படும் நிலையில், இந்த ஆண்டு 71 அடி வரை தண்ணீரை தேக்கி வைக்க பொதுப் பணித்துறையினர் முடிவெடுத்தனர்.

5-வது முறையாக முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை… மகிழ்ச்சியில் 5 மாவட்ட மக்கள்…

இதன்படி நேற்று மாலை வைகை அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியிருந்த நிலையில், அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 500 கனஅடி நீர் வந்துகொண்டிருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணை தனது முழு கொள்ளளவான 71 அடியை 5-வது முறையாக எட்டி சாதனை படைத்தது. இதற்கு முன்பாக கடந்த 2008ஆண்டில் அணை முழு கொள்ளளவை எட்டியிருந்தது.

இன்று காலை நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 71 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாகவும் இருந்தது. பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் தண்ணீர் முழுமையாக வைகை ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் வைகை அணையில் தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது. இதனிடையே, வைகை அணை நிரம்பியதால் அணை வாழ்வாதாரமாக கொண்டுள்ள தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.