66 அடியை எட்டிய வைகை அணை… கரையோர பகுதிகளுக்கு முதற்கட்ட வெள்ள எச்சரிக்கை விடுப்பு…

 

66 அடியை எட்டிய வைகை அணை… கரையோர பகுதிகளுக்கு முதற்கட்ட வெள்ள எச்சரிக்கை விடுப்பு…

தேனி

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியாக உயர்ந்துள்ளது. இதனை அடுத்து கரையோர பகுதிகளுக்கு முதற்கட்ட வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை நீர்தேக்கம் அமைந்துள்ளது. மொத்தம் 71 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில், 69 அடி வரை நீர்த்தேக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான வருசநாடு மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்தது. இதன் காரணமாக நீர்வரத்து அதிகரித்தால் வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

66 அடியை எட்டிய வைகை அணை… கரையோர பகுதிகளுக்கு முதற்கட்ட வெள்ள எச்சரிக்கை விடுப்பு…

இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 9 ஆயிரத்து 600 கனஅடி நீர் வந்துகொண்டு இருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 66 அடியாக உயர்ந்தது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஓரிரு நாட்களில் அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டக்கூடும் என கருதப்படுகிறது. இதனிடையே, வைகை அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்ந்ததை அடுத்து தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள வைகை ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு பொதுப்பணித்துறையினர் முதற்கட்ட வெள்ள எச்சரிக்கை விடுத்துள்ளனர்.