வலை விரிக்கும் அரசியல் கட்சிகளுக்கு வடிவேலு “டாடா பை..பை..”

 

வலை விரிக்கும் அரசியல் கட்சிகளுக்கு வடிவேலு “டாடா பை..பை..”

தமிழகத்தில் கடந்த 2011- ம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில்தான் அதிக பட்சமாக நடிகர், நடிகையர் பிரசாரத்தில் ஈடுபட்டனர். நடிகர்கள் ராமராஜன், நெப்போலியன், வாகை சந்திரசேகர், வடிவேலு, சிங்கமுத்து, குண்டு கல்யாணம், குஷ்பு, நடிகைகள் சி.ஆர்.சரஸ்வதி, பாத்திமா பாபு, சிம்ரன், குயிலி, விந்தியா போன்ற சினிமா நட்சத்திரங்கள் தேர்தல் பிரச்சாரம் செய்தனர். இதில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக நடிகர் வடிவேலு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவருடைய நகைச்சுவையான பிரசாரத்தை அனைவரும் ரசித்தனர்.

வலை விரிக்கும் அரசியல் கட்சிகளுக்கு வடிவேலு “டாடா பை..பை..”


அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த விஜயகாந்தைதான் அவர் கடுமையாகச் சாடினார். திருவாரூரில் கருணாநிதி முன்னிலையில் விஜயகாந்தை தாக்கி அவர் பிரசாரத்தை ஆரம்பித்தார், மு.க ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூரில், வடிவேலு பேச்சுக்கு மிகப் பெரிய வரவேற்பு இருந்தது. மருதமலை படத்தில் அவர் பேசிய “எதையாவது திங்கணும்னு ஆசையாயிருந்தா கடைக்கு போய் ஒரு வடைய வாங்கித் திண்ணு, பன்னை வாங்கித் திண்ணு..” என்ற காட்சியை உல்டா செய்து”விஜயகாந்துக்கு முதல்வராகனும்னு ஆசை இருந்தா யாருகிட்டேயாவது ஒரு அஞ்சு கோடி பத்து கோடி கொடுத்து சினிமா எடுக்கச் சொல்லி முதல்வர் வேசத்தை போட்டுக்கலாம்… அதை விட்டுப்புட்டு நிஜத்திலேயே முதல்வராகனும்னா… இது நல்லாவா இருக்கு குடிகாரங்ககிட்ட நாட்ட கொடுத்துடாதீங்க, சொல்லிட்டேன்”,!” என்றெல்லாம் பேசினார்.

வலை விரிக்கும் அரசியல் கட்சிகளுக்கு வடிவேலு “டாடா பை..பை..”


ஆனால் இப்போது அதே விஜயகாந்திடம் திமுக சார்பில் கூட்டணி குறித்து பேசியதாக தகவல் அறிந்த வடிவேலு இது குறித்து வேதனையடைந்துள்ளார். இது பற்றி அவருக்கு நெருங்கிய சிலர் கூறும்போது ‘‘ வடிவேலு இனி அரசியலே வேண்டாம் என்ற முடிவில் இருக்கிறார் அவர் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்துகிறார் என்றனர். இதற்கிடையே வடிவேலுவுக்கு பாஜக வலை விரித்துள்ளது. எனவே அவர் பா.ஜ.க.வில் சேர்ந்து பிரசாரம் செய்யப்போகிறார் என கிளப்பி விட்டுள்ளனர்.

வலை விரிக்கும் அரசியல் கட்சிகளுக்கு வடிவேலு “டாடா பை..பை..”


இது குறித்து வடிவேலுவின் நெருங்கிய நண்பர்கள் கூறும்போது “சினிமாவில் வேண்டுமானால் அரசியல் காட்சியில் நடிக்கலாமே தவிர அவர் நிஜ அரசியல் பக்கம் இனி ஒரு போதும் தலை வைத்துப் படுக்க மாட்டார்” என்றனர்.