• February
    24
    Monday

Main Area

Main



தப்பான 10 பேரு உட்கார்ந்துக்கிட்டு வடை திண்ணுக்கிட்டு சினிமாவ கெடுக்குறானுங்க: நடிகர் வடிவேலு சாடல் 

வடிவேலு
வடிவேலு

ஷங்கரின் தயாரிப்பில் உருவான இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தின் படப்பிடிப்பு துவங்கி பாதியில் நின்றது. இதில் வடிவேலு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்ததே இதற்கு காரணம் என்று கூறப்பட்டது. அதனால், இப்படத்தில் நடிக்க வடிவேலு ஆர்வம் காட்டாததால் ஷங்கருக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டது. எனவே, தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவிற்கு ரெட் கார்ட் தடை விதித்தது.

இந்நிலையில் சமீபத்தில் வடிவேலு நடித்த நேசமணி கதாபாத்திரம் உலகம் முழுவதும் ட்ரெண்டானது. இது குறித்து நடிகர் வடிவேலு பிரபல ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில் பல்வேறு கேள்விகளுக்குச் சுவாரசியமாகப் பதிலளித்தார். அப்போது இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தை பற்றி கேள்வி கேட்கப்பட்டது.  அதற்கு அவர் கூறியதாவது' சிம்புதேவன் ஒன்றும் பெரிய இயக்குநர் கிடையாது.  அவனுக்கு படம் வரையத்தெரியும். இந்த படத்தின் போது வரைஞ்சு காட்டுவான். பெரிய டைரக்டர்கள் மாதிரி நடிச்சுக்காட்ட தெரியாது. அந்த படத்துக்காக 2வருடமா அவனோட உட்கார்ந்து கதைல இறங்கி வொர்க் பண்ணியிருக்கிறேன். இப்ப வந்து நான் சொல்லுறது கேளுன்னு சொன்னா எப்படி?  பெரிய டைரக்டர்கிட்ட ரொம்ப போக முடியாது.  சின்ன ஆளுன்னு தான் நானும் முழுசா இறங்கி கதையை ரெடி பண்ணுனேன்.  மூணு கேரக்டரா இருந்தா நல்லா இருக்கும் என்று சொல்லி அது மாதிரியே செய்தோம்.

imsai

படத்தின் ஷூட்டிங் ஆரம்பிச்சு ஒரு பாட்டு மட்டும் தான் எடுத்தோம்.  அதுக்குள்ள எனக்கு  உடை தைப்பவன்,  மேக்கப் மேன், கத்தி  சண்டை சொல்லி தருபவன் என்று அனைவரையும் விரட்டி விட்டுவிட்டு, சிம்பு தேவனே பார்த்துக்கிட்டாரு. படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் ஷங்கர் அதை மாத்துங்க, இதை மாத்துங்கனு சொல்லுறாறுன்னு சொல்லிக்கொண்டே இருந்தான்.  

imsai

அதுமட்டுமின்றி என்னுடைய ஆளுங்களையும் தூக்கிட்டான். நான் அப்பத்தான் கேட்டேன்.  அவர்  சொல்லுறாருன்னா அவரே டைரக்ட் பண்ணட்டுமே. நீ எதுக்கு இடையில..’ன்னு ஒரு வார்த்த தான் கேட்டேன்.  அந்த பஞ்சாயத்து இன்னும் போய்க்கிட்டு இருக்கு.  தப்பான 10 பேரு உட்கார்ந்துக்கிட்டு வடை திண்ணுக்கிட்டு சினிமாவ கெடுக்குறானுங்க.  எனக்கும் ஆதரவா சில பேரு இருக்காங்க. என்னை கூப்பிடுறானுங்க. எதுக்கு கூப்பிடுறானுங்கன்னு தெரியல. மீண்டும் தமிழ் திரைத்துறையில் எனக்கு வாய்ப்பு தந்தால் நடிப்பேன்.  எனக்கு ஹாலிவுட்டுலே இருந்தும் அழைப்பு வருது.  பேசாம அங்க போயிடபோறேன்' என்று கூறியுள்ளார். 

2018 TopTamilNews. All rights reserved.