நடிகர் வடிவேல் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்!

 

நடிகர் வடிவேல் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்!

90s,2k கிட்ஸ் என்று அனைவருக்கும் எப்பவும் பிடித்தமான நகைச்சுவை நடிகர்கள் என்றால் அது வடிவேலு. அவரின் புதுப்படங்கள் ஒன்றும் தற்போது ரீலிஸ் ஆகவில்லை தான்,ஆனாலும் என்றுமே சமூக வலைத்தளங்களில் ஏதாவது ஒரு வடிவத்தில் இடம்பெற்றுக் கொண்டே இருப்பார். அதற்கு காரணம் ரசிகர்களிடையே அவர் ஏற்படுத்திய தாக்கம் தான். தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரில் கச்சிதமாக நடித்து ரசிகர்களை தம்பக்கம் இழுக்க வல்லவர்.

நடிகர் வடிவேல் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்!

திரைத்துறையில் சில காலமாகத் தலைகாட்டாமல் இருந்த வடிவேலு தற்போது பாஜகவில் இணையவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக பாஜகவில் ஏராளமான தமிழக நடிகர், நடிகைகள் இணைந்துள்ளன. கங்கை அமரன், கஸ்தூரி, ராதாரவி, கெளதமி, நமீதா, விஜயகுமார், காய்த்ரி ரகுராம், பேரரசு, எஸ்.வி சேகர், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், குஷ்பு உள்ளிட்டோர் பாஜகவில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.