• March
    28
    Saturday

Main Area

Main



வடிவேலு பட காட்சி உண்மையானது... இரு வேட்பாளருக்கும் ஓட்டு அளித்ததைக் காட்டும் பாட்டி!

Screenshot of the vadivelu comedy
Screenshot of the vadivelu comedy

பணம் கொடுத்த இரண்டு வேட்பாளருக்கும் ஓட்டுப் போட்டதாக பாட்டி ஒருவர் சொல்லும் காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திரைப்படம் ஒன்றில் வாக்களித்து வரும் நபரிடம் ஒருவர் "யாருக்கு ஓட்டுப் போட்ட" என்று கேட்பார். அதற்கு அவர் "உங்களுக்குத்தான் போட்டேன்" என்பார். அவரிடம், வடிவேலு "யாருக்கு ஓட்டு போட்ட" என்று கேட்பார். வடிவேலுவிடமும் அவர் "உங்களுக்குத்தான் போட்டோன்" என்பார். நம்பலை என்று வடிவேலு கூறியதும், கையோடு எடுத்துவந்த வாக்குச்சீட்டைக் காட்டி, "நீங்க நம்ப மாட்டீங்கன்னு தெரியும். அதனால தான் வாக்குச்சீட்டை கையோட எடுத்திட்டு வந்துட்டேன். பணம் கொடுத்த அவனுக்கு ஒரு குத்து, பணம் கொடுத்த உனக்கும் ஒரு குத்து" என்று காட்டுவார். அதுபோன்று ஒரு சம்பவம் திருவாரூரில் நடந்துள்ளது. 
திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் நான்காவது வார்டுக்கு நடந்த தேர்தலில் லட்சுமி என்ற பாட்டி வாக்களிக்க வந்தார். அவர் வாக்கு செலுத்திய விதம் பற்றி வேட்பாளரின் முகவர்களிடம் விளக்கும் காட்சி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில், இரண்டு கட்சியினரிடமும் வாங்கிய பணத்திற்காக அவர்களின் இரண்டு சின்னங்களிலும் வாக்கு செலுத்தியதாக மாதிரி வாக்குச்சீட்டைக் காண்பித்துக் கூறுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

2018 TopTamilNews. All rights reserved.